மீண்டும் 950 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை! வெளியான அறிவிப்பு

சந்தையில் கிடைக்கும் விலைக்கு ஏற்ப 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால், முன்பதிவு வெளியிடப்பட்ட விலையில் மட்டுமே விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எரிவாயு கையிருப்பு மேலும், ஏப்ரல் 2024 வரை நாட்டுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு நிறுவனத்திடம் இருப்பதாகவும் … Read more

சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் அம்பலாந்தொட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தொட்ட – நோனாகம, வலிபிட்டனவிலை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு சுற்றுலா வீசா மூலம் நபர்களை அழைத்துச் சென்று அங்கு அவர்களை நிற்கதியாக்கி உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. பண மோசடி இந்த சந்தேகநபர் 19 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணைகள் … Read more

நீதிமன்ற உதவியை நாடத் தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய பதில் வழங்கப்படாவிட்டால் உயர் நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரச அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் உள்ளிட்ட தேர்தல்களில் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணம் வழங்குமாறு கோரப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்ப … Read more

அரசாங்கத்தின் வரி விதிப்பால் 500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்

அரசாங்கத்தின் வரி விதிப்பால் அண்மைய நாட்களில் சுமார் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளரான வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களிடமிருந்து 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வரி அறவிடப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள் உட்பட ஏனைய தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல் … Read more

பிரான்சில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து: தாய் மற்றும் 7 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழப்பு

பிரான்சில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தாயுடன் சேர்த்து 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 வருடங்களின் பின்னர் அந்நாட்டில் பதிவாகியுள்ள மிக மோசமான தீ விபத்து இதுவென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், … Read more

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் மேற்படி குறிப்பிட்டுள்ளனர். நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை, பொது நிதி முகாமைத்துவ முறைமைகளுடன் ஒருங்கிணைப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய நன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்    இந்த கலந்துரையாடலில், … Read more

துருக்கியில் மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம்

துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவில் 7.5ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  சேத விபரங்கள் வெளியாகவில்லை இதற்கு முதல் பதிவான நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் தற்போது மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.  Source link

கொட்டியா என கூறி விரட்டினார்கள்! யுத்தத்தின் வடுவை சுமந்து வாழும் முதியவரின் பரிதாப நிலை (Video)

யுத்தம் என்பதை நாம் கடந்து வந்துள்ள போதும் யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் இதுவரையில் முற்றாக மாறிவிடவில்லை. அப்போது ஏற்பட்ட பாதிப்புக்களால் சில குடும்பங்களுக்கு இப்போது கூட வாழ்வாதாரத்தில் பலத்த அடி விழுந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. அப்படி கிளிநொச்சி – முட்கொம்பன் பகுதியில் வசித்து வரும் இன்பசிறி றங்கன் (வயது 60) என்ற முதியவர் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக தனது காலை இழந்து நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போதும் … Read more

ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் இம்மாதம் 10 ஆம் திகதி 8ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்குபற்றவுள்ள இந்த ஆண்டிற்கான மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகியன குழு ஏ இலும் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் … Read more

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (06) காலை கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். நீதியமைச்சர் விஜயதாச … Read more