எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தேர்தலை பாதிக்காது : மகிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்த வகையிலும் பாதிக்காது என எல்லை நிர்ணய சபையின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சிக்கல் இல்லை கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய சபையின் அறிக்கை மார்ச் மாதம் 9ம் திகதிக்கு பின்னரே ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணய சபையின் செயற்பாடுகளினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு எந்த … Read more

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

 பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசிலுக்கான நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் அடுத்து வரும் சில வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று மஹாபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் தமது கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏதேனும் குறைவு இருப்பின் அதன் நிலுவை தொகையை உரிய பல்கலைக்கழகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் … Read more

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டுநினைவு முத்திரை வெளியீடு (Photos)

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று (02.02.2023) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.  இந்த நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் … Read more

மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி (Photos)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்துள்ளார்.  மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்ததோடு மல்வத்து மகாநாயக்க வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு விசேட நினைவுப் … Read more

நாளை வரை மின்தடை இல்லை! உயர் நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதி

மின் தடை தொடர்பில் உயர் நீதிமன்றில் இலங்கை மின்சார சபை உறுதியொன்றை வழங்கியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு, இன்று (02.02.2023) உயர்நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில், மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சின் … Read more

அரச செலவினங்களை மேலும் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி … Read more

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது

“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் 31 அன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் … Read more

நான்கு பொருட்களின் விலைகள் குறைப்பு லங்கா சதொச அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் ,இன்று (02) முதல் அமுலுக்குவரும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு அரிசி, கோதுமை மா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ஆயிரத்து 675 ரூபாவாகும். ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 165 ரூபாவாகும். இது 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு அரிசி 10 ரூபாவாலும், … Read more

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  2023 பெப்ரவரி 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 02 ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்து நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமானவானம் காணப்படுவதுடன், வடக்கு,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய … Read more

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் நேற்று(01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடு எதிர்நோக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.இதன் போது, இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் … Read more