யாழ். பொதுமக்களுக்கு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண மேலும் … Read more

வடக்கில் இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகள் மீண்டும் மக்களுக்கு

வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தி வரும் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகளை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் அந்த மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அறிவிப்பு பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் தமது காணிகளை மீண்டும் தமக்கு வழங்குமாறு வடக்கு பகுதி தமிழ் மக்கள்  … Read more

உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும், கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 … Read more

இலங்கை வரும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அதன்படி இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வரை அவர் நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவில் அவர், அமெரிக்க – இந்திய வருடாந்த வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார். அமெரிக்க – இலங்கை உறவு இலங்கையில், அமெரிக்க – இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வில் அவர் … Read more

ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை வரும் பான் கீ மூன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு அமைய இலங்கையில் நிரந்த அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்கள் சம்பந்தமாக சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பான் கீ மூன் எதிர்வரும் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். தென் கொரியாவின் அரச நிறுவனமான உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் பான் கீ மூன் இலங்கையுடன் இந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திட … Read more

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

நாட்டின் மொத்த சனத்தொகையான 23 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 126 இலட்சத்து 71 ஆயிரத்து 207 பேர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்களில் 18 லட்சத்து 54 ஆயிரத்து 27 பேருக்கு NDL எண்கள் கொண்ட ஓட்டுநர் உரிமப் புத்தகங்களும், 29 லட்சத்து 58 ஆயிரத்து 925 பேருக்கு A எண்ணுடன் அச்சிடப்பட்ட ஓட்டுநர் … Read more

நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், நிர்வாகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். விசாரணைகள் குறித்து 6 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த புலனாய்வு தகவல்கள் தொடர்பில், நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக பொறுப்புக்கூற … Read more

கொழும்பில் மூடப்பட்டுள்ள வீதிகள்: புதிய போக்குவரத்து திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை காரணமாக கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் இடம்பெறும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, அணிவகுப்புக்கான ஒத்திகை சனிக்கிழமை (28) முதல் தினமும் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும். இந்த நேரத்தில் பின்வரும் சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்படும் என … Read more

இலங்கையின் கிழக்கு கரையை வந்தடையவுள்ள காற்றழுத்தம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை, ஜனவரி 28 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையுமெனவும்,  அதன் பின்னர், அது படிப்படியாக மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 … Read more

நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த நான் கட்டுப்பட்டுள்ளேன்.

நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த நான் கட்டுப்பட்டுள்ளேன். • 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாமின் தீர்ப்புக்கமைய செயற்படுவேன். அதிகாரங்களைப் பகிரத் தயார். • காணி ஆணைக்குழுவை ஸ்தாபித்து, தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். – ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டில் தெரிவிப்பு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது … Read more