ரதல்ல வீதி விபத்து: ஆத்மசாந்திக்கான சர்வ மத பிரார்த்தனை
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான சர்வ மத பிரார்த்தனை நாளை (27) நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. மகா சங்கத்தினரின் தலைமையிலான சர்வ மதத்தலைவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வ மத பிரார்த்தனை நடைபெறவுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலப்பட இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.