கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியில் வாழும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியான தமிழரும் முச்சக்கரவண்டி சாரதியான சிங்களவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த பஸ் குறித்த வான் மீது மோதியமையால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா நோக்கி பயணித்த வானில் ஹற்றன் பகுதியை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர் இவர்களில் கணவன், மனைவி மற்றும் … Read more

நாடளாவிய ரீதியில் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமப்புற வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் இல்லாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு  இதனால், கிளினிக்குகள் மற்றும் வெளி நோயாளர் பிரிவு நோயாளிகள், வெளி மருந்தகங்களில் அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  மருந்து தட்டுப்பாடுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து … Read more

முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக நீதிக்கான ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு

75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார். எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எந்த சமயமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சமயம் அல்ல எனவும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில் (19) நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

வேலன் சுவாமியின் கைதை கண்டிக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் மற்றொரு முயற்சி என பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துபொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சேர் எட் டேவி … Read more

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையே கூட்டு வேலைத்திட்டம்

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையே கூட்டு வேலைத்திட்டம்• கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு வருகை தந்திருக்கும் இந்திய … Read more

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நம்புவதாகவும் அதனால் ஏனைய தரப்புகளைப் பற்றி பாராமல் சரியானவை என தான் நினைக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடனான … Read more

யாழில் வாள்வெட்டு: வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம்

கல்வியங்காட்டுப் பகுதியில் வர்த்தக நிலையம் மற்றும் அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் மீதும் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்றுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதாாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளது. நேற்றுமுன் இரவு கல்வியங்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழுவினரை கைது செய்வதற்காக விசேட அணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வாள் … Read more