1,000 ஓட்டங்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சாதனை
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் இரட்டை சதத்தால் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. … Read more