யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி

யாழ் மாநகர சபையில் முதல்வர் தெரிவு யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று(17) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு ஜனவரி 19 ஆம் … Read more

21, 22 பிரிவுகளின் கீழ் பிழையான தகவல்களை வழங்கினால் அதிகாரிகளுக்கு தண்டனை

அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக வெளிப்படையான முறையில் நலன்புரி பயனாளிகளின் பட்டியலை இன்னமும் தயாரிக்க முடியவில்லை – அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிப்பட்டது 21 மற்றும் 22 பிரிவுகளின் கீழ் பிழையான தகவல்களை வழங்கினால் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியும் சர்வதேச நாணய நிதியம் முன்மொழிவு செய்திருப்பதால் இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மையுடன் அதன் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான பட்டியலைத் தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிப்பதற்கான … Read more

பொருளாதார நெருக்கடிக்கடியினால் கட்டுமானத் துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் தேசியப் பேரவை உப குழுவில் கவனம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கட்டுமானத் துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் (11) பாராளுமன்றத்தில் கூடிய போதே … Read more

முக்கிய தகவல்களை அம்பலப்படுத்த தயாராகும் மைத்திரி! சபையில் வெளியாகவுள்ள விடயம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய தகவல்கள் சிவற்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போது, தகவல்கள் முன்கூட்டியே வெளியாகியிருந்த போதும் அதனை தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறான … Read more

ஜனாதிபதி முதல், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் நிதி சாராத அனுகூலங்களுக்கான வரியை சரியாக…..

ஜனாதிபதி முதல், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் நிதி சாராத அனுகூலங்களுக்கான வரியை சரியாக  அறவிடுவதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டும் – அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் வலியுறுத்து நாட்டின் ஜனாதிபதி முதல் அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் நிதி சாரா அனுகூலங்கள் தொடர்பில் அறவிடப்படவேண்டிய வரியை (Tax on non-cash benefits) சரியாக அறவிடுவதற்கான முறைமையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) … Read more

பாராளுமன்றம் எதிர்வரும் 20 வரை கூடும்

• தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பது தொடர்பான இறுதித்தீர்மானம் மேற்கொள்ள எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்  பாராளுமன்றத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.    இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை … Read more

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பார்மஸிகளையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம்

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  நேற்று (16) மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்தகங்களில் இருந்து பல வகையான மருந்துகளை வாங்குவதாக வைத்திய அதிகாரியும் பொலிஸாரும் தெரிவித்தமைக்கு  பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில்  போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை … Read more

2023 ஆண்டின் முதலாவது சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார். குத்தகை உடன்படிக்கையொன்றின் கீழ் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் தொடர்பான நடவடிக்கை முறைக்காக ஏற்பாடு செய்வதற்கும், குத்தகை, வாடகைகள், சேவை விதிப்பனவுகள் மற்றும் ஒழித்துக் கட்டப்பட்ட சேதவீடுகளின் நிலுவைகளை அறவிடுவதற்கான ஒழுங்குபடுத்துவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக இந்தச் சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடு … Read more

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் முதல் முடிவடையும் வரை மின் துண்டிப்பு இடம்பெறமாட்டா

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ,பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பட்டார். மேலும், பரீட்சை எழுதும் … Read more

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் நடைமுறையில் மாற்றம்

நாடு  தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில், அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்காக, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவருவதற்கென ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ,அதன்படி, நிறைவேற்று அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய தினத்தில் … Read more