அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் – தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே … Read more

மஹிந்த வாழ்ந்த வீட்டில் குடியேற தயாராகும் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வீட்டின் புனரமைப்பு காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ஸ்டென்மோர் க்ரெசன்ட்டில் அமைந்துள்ள மற்றொரு உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி காலத்தில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 400 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பீடு முன்வைக்கப்பட்டது, ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவினால் அது நிறைவேற்றவில்லை. ஆனால் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில்  விக்ரமசிங்க இந்த … Read more

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை இல்லை

அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (16) திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், இன்று திங்கட் கிழமை (16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானம் எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டு வருவதை கருத்திற்கொண்டு, இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை … Read more

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

 உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல். ஜேர்மனியைக் கைவிட்ட புடின் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த … Read more

புதுவருடத்தில் சிக்கலில் சிக்கப்போகும் இரு ராசிக்காரர்கள்: ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன் (video)

பல சோதனைகள் நிறைந்த 2022ஆம் ஆண்டை கடந்து 2023 ஆம் ஆண்டில் நாம் அனைவரும் அடி எடுத்து வைத்துள்ளோம். இந்த ஆண்டில் பல கனவுகளுடன் இருக்கக்கூடிய 12 ராசிக்காரர்களும் ஜோதிட அடிப்படையில் அதிர்ஷ்ட பலன்களை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். பொருளாதாரம், மேற்படிப்பு, வெளிநாடு செல்லும் யோகம், குடும்ப சூழல், திருமணம், ஆரோக்கியம், தொழில், வேலை வாய்ப்பு என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளுடன் பயணிக்க வேண்டிய நிலையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம். … Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்தமைக்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். குறித்த கடிதம் தொடர்பாக, நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே அவர் மன்னிப்பு கோரியதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவே தாம் கடிதம் வழங்கியதாகவும், … Read more

யாழில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணி உடைந்தது! வெளியேறிய விக்னேஷ்வரன்- மணிவண்ணன் (Photos)

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையிலேயே விக்னேஷ்வரன் மற்றும் மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. முதலாம் இணைப்பு  விக்னேஷ்வரன் தலைமையிலான … Read more

இலங்கை வரும் சீன உயர்மட்ட பிரதிநிதிகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரதிநிதிகள் இவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அந்த கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதியமைச்சர் சேங் ஷவ் தலைமை தாங்குகிறார். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடன் … Read more

ஓமானில் இருந்து இலங்கை திரும்ப தயாராக இருந்த பெண் திடீர் உயிரிழப்பு

ஓமான், மஸ்கட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மஹவ, தலதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு புறப்படுவதற்கு தயாராக இந்தப் பெண் இலங்கைக்கு புறப்படுவதற்கு தயாராக இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, இந்தப் பெண் திடீரென சுகயீனமடைந்துள்ளார். அதன்பின்னர் சிகிச்சைகளுக்காக ஓமான் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. … Read more

இலங்கையின் வங்கிகள் உள்ளிட்ட சில நிறுவனங்களின் மதிப்பீடுகளை தரமிறக்கியுள்ள பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம்

இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தரமிறக்கியுள்ளது. இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது. இதன்படி இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்சல் வங்கி என்பன ஏ தரத்தில் இருந்து … Read more