உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்…

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுக்களில் கூட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட வேளையில் தேர்தலுக்குத் தேவையான பணத்தைக் கொண்டுள்ளமையால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூhராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும் பொஹொட்டுவவும் சதி செய்வதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த … Read more

சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜனவரி13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜனவரி13ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தினேஷ் சாப்டர் படுகொலை விவகாரம்! மறைக்கப்படாத தகவல்கள்

பிரபல தொழிலதிபர் தினேஷ் சாப்டர் மரணம் தொடர்பில் உண்மையான தகவல்களை மறைப்பதற்கு பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறதா ? என்ற சந்தேகம் நிலவி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் அவ்வாறு அழுத்தம் பிரயோகிப்போர் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மறைக்கப்படாத தகவல்கள் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வியெழுப்பிய போது, தினேஷ் சாப்டர் படுகொலை அல்லது மரணம் தொடர்பில் இடம்பெறும் … Read more

அரச ஊழியர்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடு – அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்திற்கு நீண்டகாலமாக நியமிக்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்களின் பணிகள் என்ன என்பது பற்றி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார். சில அரச ஊழியர்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடுகளினால் மக்களுக்கு போதியளவிலான சேவைகள் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடும் கிடைத்துள்ளது. இதனால் நாடு பின்நோக்கி தள்ளப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகளவிலான கால்நடை வைத்தியர்கள் கொழும்பு பிரதேசத்தில் காணப்படுகிறார்கள். இவர்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பூனை, நாய் போன்ற செல்லப் பிரயாணிகளுக்கு மாத்திரமே … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முன்னால் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு 6 மாத கால அவகாசம்

2019 ஆண்டில் உயிர்த்த ஞாயிறு அன்று  பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கான தகவல் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்திருந்த போதிலும் ,அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க தவறியமையினால் ,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு விதிக்கபட்ட இழப்பீட்டுத்தொகையை 6 மாத காலத்திற்குள் செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் இன்று (12)  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு  உத்தரவிட்டுக்கப்பட்டது.   இதேபோன்று  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரசாங்க … Read more

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திரதின விழா பெருமையுடன் – ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் பல சமய மற்றும் கலாசார நிகழ்வுகள்

அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பெருமை மிகு விழாவில், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.   தேசிய சுதந்திர … Read more

இலங்கையின் புகையிரதக் கட்டமைப்பினை மேம்படுத்தும் இந்தியா  

இலங்கையின் கௌரவ போக்குவரத்து அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய திரு கோபால் பாக்லே ஆகியோர் தலைமையில், 2023 ஜனவரி 08 ஆம் திகதி மதவாச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித்திட்டத்தின் அடிப்படையில் 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்திய பொதுத்துறை கம்பனியான IRCON நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும், மாஹோ முதல் ஓமந்தை வரையான (128 கிமீ) புகையிரதப் பாதை புனரமைப்பு பணிகள் … Read more

ஹாரிஸ்பத்துவ தொகுதியில் வெனிலா உற்பத்திக் கிராமம்

ஆரோக்கியமான உற்பத்திக் கிராம நிகழ்ச்சித் தி;ட்டத்தின் கீழ் ,கண்டி மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையில் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகத்தின் அனுசரணையில் வெனிலா உற்பத்திக் கிராமத்திற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் முதற்கட்டமாக 75 குடும்பங்களை இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணைத்துள்ளதாக ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மொஹான் தர்மதாஸ தெரிவித்தார்.   வெனிலா உற்பத்தித் துறையை மேற்பார்வையிடுவதற்காக சமூகவலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவெல் தலைமையிலான குழுவினர் நேற்று (11) தெம்பரலாவ கிராமத்திற்கு விஜயம் செய்தனர்.   இவ்வுற்பத்திக்காக தேசிய சந்தையொன்றை ஏற்படுத்துவதாகவும், அதற்காக … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் அலுவலகம் முற்றுகை! கடும் வாக்குவாதம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளரின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவினை வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் வாக்குவாதம் இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பணியகத்தின் பொது முகாமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை தொடர்ந்து, எதிர்வரும் சில தினங்களில் சாதகமான தீர்வு வழங்கப்படும் … Read more

 வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் பெண் தொழில் முனைவோரை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) மாலை கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக … Read more