மத்திய வங்கி ஆளுநர் இலங்கை மக்களுக்கு விடுக்கும் நற்செய்தி

பணவீக்கத்தை குறைப்பது மத்திய வங்கியின் கடமை மத்திய வங்கி அந்த விடயத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன்  என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.   பௌத்த மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பு  இது குறித்து அவர் மேலும்  தெரிவிக்கையில்,  பணவீக்கத்தை மேலும் குறைக்க முடியும் என  நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன்,  நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் கூறினார்.  பணவீக்கத்தை குறைப்பது மத்திய வங்கியின் … Read more

நாடு எதிர்பார்த்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன

சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பதிலும், கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதும் அரச ஊழியர்களின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு.தினித் சிந்தக கருணாரத்ன இன்று (02) தெரிவித்தார். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தாய்நாடு கோரும் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேணடும என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர்கள் 2023 ஆம் … Read more

இலங்கை அரசியல் களத்தில் இந்த வருடம் ஏற்படப் போகும் மாற்றங்கள்! செய்திகளின் தொகுப்பு (Video)

 2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தத் தேர்தலுக்காக மக்களைத் திரட்டி போராடுவோம். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஜே.வி.பி.க்கு சவால் விடுக்கும் அனைவரது சவால்களையும் முறியடித்து வெற்றியை பெறுவோம். மேலும் 2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.  இந்த செய்தி தொடர்பான … Read more

மனநோயாளியாக மாறும் வாய்ப்பு! இலங்கையில் ஆபத்தின் விளிம்பில் இளம் சமுதாயம்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தவில்லை எனில் அவர்கள் மனநோயாளியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அனோயிடட் இளைஞர் மன்றத்தின் தலைவரான 23 வயது இளைஞர் அலி சித்திக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறு போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களானால் அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான செவ்வி அடங்கிய முழுமையான காணொளி, Source link

2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், 2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது என  இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். இவ்வாறு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அது மிகவும் அநியாயமானது எனவும் அதனை மக்கள் செலுத்த வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்கட்டணம் அதிகரிப்பு இதனையும் மீறி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை செய்ய வரமாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.    இதேவேளை, 2023 … Read more

நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை 600 கோடி ரூபா

கடந்த வியாழக்கிழமை 400 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை 200 கோடி ரூபாயும் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். . நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் நடவடிக்கை அடுத்துவரும் இரண்டு வாரங்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கூறினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி விவசாயிகளுக்காக 800 கோடி ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அலுவலக பணிக் குழாம் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அலுவலக பணிக் குழாம் 2023 புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01)  காலை இடம்பெற்றது. . இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி கடமைகளை ஆரம்பித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1,996 வீடுகள் – கலைஞர்களுக்கு 108 வீடுகள்

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் … Read more

முட்டை விலையை குறைக்க முடியும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். பேக்கரி உற்பத்திகளின் விலை இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கேள்விக்கு ஏற்ற அளவில் முட்டை நிரம்பல் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா அல்லது … Read more