வெளிநாட்டு தொழில் வாய்ப்பு: ஒரு தோட்டத்தொழிலாளர்களையே ஏமாற்றிய நபர்

கினிகத்ஹேன பிளெக்வொடர் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரிடம், வெளிநாட்டு வேலை வாப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடி செய்த நபர் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், சந்தேக நபர் தற்போது குறித்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக ஏமாற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கினிகத்ஹேன பிளெக்வொடர் தோட்டத்திற்கு விஜயம் செய்து தோட்ட தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அறிவித்துள்ளார். மாலைத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளில் … Read more

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் நுகர்வோர் சேவை அதிகாரிகள், பிரதேச மட்டதில் வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷான்த கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் முதல் இந்த … Read more

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும், வட்டியையும் செலுத்துவதில் இந்தப் பட்ஜெட்டில் பெரும் பங்கு இருக்கிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இளைஞர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.  இதன்போது, அரசு சேவையின் செலவுகளையும் வீண் விரயத்தையும் குறைக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏதாவது திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி,  அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும், வட்டியையும் செலுத்துவதில் இந்தப் பட்ஜெட்டில் பெரும் பங்கு இருக்கிறது. உண்மையில் அதுபெரும் சுமைதான். … Read more

பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த கதி

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் படகொன்று நேற்று(14.12.2022) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் குறித்த படகில் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளமையால், இந்த படகு கவிழ்ந்த சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள் பிரான்ஸ் நாட்டிலுள்ள கலாயிஸ் துறைமுகத்துக்கு தெற்கே அமைந்துள்ள Ambleteuse கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் பிரித்தானியா நோக்கி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு … Read more

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம்

 தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிடையே நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்று (15.12.2022) நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக முதலிடத்தை பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பெற்றுக்கொண்டார்.

இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோid (டிசம்பர் 14) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் தூதுக்குழுவினரை இராஜாங்க அமைச்சர் வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் … Read more

அங்கொட வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை ஹெரோயின் குறித்து மேலும் தகவல்கள்

அங்கொட டயர் சந்தி என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரதேசத்தில் வீடொன்றின் கட்டிலின் கீழ் மிகவும் ரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட ஹேரோயின் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் எடை 12 கிலோ கிராம் ஆகும். பொலிஸ் விசேட அதிரடி பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுதொடர்பான முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த போதை பொருளுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த … Read more

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம்

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம் வழங்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.. இதேவேளை இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 இலட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 இலட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை … Read more