இராணுவத்தினரின் விவசாய அறுவடைகள் மட்டக்களப்பு அரச அதிபரிடம் கையளிப்பு

மட்டக்களப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய அறுவடைகள் இராணுவத்தின் 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலுப பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி மேஜர் நிமால் பத்மசிறியினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தின் 11 எஸ்.ஆர் சிங்க படைப் பிரிவினால் விவசாயப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்முனைப் பற்றுப் பிரதேச … Read more

இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்ட வாய்ப்பு

தேசிய டிஜிட்டல் கொள்கையொன்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட முடியும் எனவும் தெரியவந்துள்ளது. தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை  தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.  இதற்காக அறிஞர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் என ஏராளமானோர் இணைந்துள்ளனர். … Read more

இலங்கையில் ஒருவர் 13,810 ரூபாய் வைத்திருந்தால் போதும் – அரசாங்கம் வெளியிட்ட தகவல்

 சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கான சமீபத்திய வறுமைக் கோட்டின் படி, இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் தொகை 13,810 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த தொகை 13,772 ரூபாயாக காணப்பட்டுள்ளது. மாவட்ட அடிப்படையின்படி கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. கொழும்பில் வாழும் ஒருவரின் … Read more

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (15.12.2022) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொது மக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச ஊழியர்களின் பொறுப்பாகும். பொது மக்களுக்கான சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச ஊழியர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாது. … Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவது குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் என பொது நிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் 8700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றினை பராமரிக்க 32000 இலட்சம் பணம் தேவைப்படும். நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? இல்லையா என்று இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் … Read more

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (14) சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் கடந்த 09 ஆம் திகதி திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 82 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய சேர்பெறுமதி (திருத்தச்) சட்டமூலம் 2022 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி முதல் … Read more

200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் மூன்று விமான நிலையங்கள்

இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் கடந்த நான்கு வருடங்களில் இருநூறு கோடிக்கும் அதிகமான பாரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள்  2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விமான நிலையத்தின் இழப்பு 169 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை விமான … Read more

இரு மாதங்கள் இருளில் மூழ்கப்போகும் இலங்கை..! வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம்

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கை இருளில் மூழ்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தளவு மழைவீழ்ச்சி எனினும், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்தமையினால் எதிர்காலத்தில் நீர் மட்டம் குறைவடைவதற்கான ஏதுநிலைகள் உள்ளன. … Read more

வீட்டுக்கடன்:மீளப் பெறுவதில்  முன்னேற்றம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தலைமையில்  (13)  அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்த அதிகாரசபையினால் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” வீடமைப்புத் திட்டம்,  “மிஹிந்து நிவஹன” திட்டம்,  சுமித்துரு திட்டம், சியபத வீட்டுத்திட்டம், சுபிரி அடுக்குமாடி திட்டம் மற்றும் இந்திய வீட்டு உதவித் திட்டம் உட்பட பல்வேறு வீட்டுத் திட்டங்களை செயல்படுத்துகின்றது.  2022 ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள்  அமைச்சருக்கு அறிக்கை  அளித்தார்கள். வீட்டுக்கடன் மீளப் பெறுதலின்  முன்னேற்றம் … Read more