முட்டைக்கான ஆகக்கூடிய விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி இடைநிறுத்தம்

முட்டைக்காக ஆகக்கூடிய விலை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதேவேளை ,முட்டைக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்குமாறு அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு நேற்று (14) கவனத்தில் கொள்ளப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனு இன்று (15) மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மெக்சிகோவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சல் – அதிகாரிகள் அதிர்ச்சி

மெக்சிகோவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்தான போதைப்பொருளினால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளர். மாத்தறை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட 650 கிராம் மெத்தம்பெட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை கொரியர் மூலம் பார்சல் வந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர் குறித்த பொதியை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார், அதன்போதே அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 13 … Read more

சுற்றுலா பயணிகளின் வருகையில் மேலும் முன்னேற்றம்

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 106,500 ஆகும். இதுவரையிலும் 20 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வருகை … Read more

காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம்

காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுநிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சர்மம்  வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல்அழற்சி, முகப்பரு, சர்ம புற்றுநோய் உள்ளிட்ட குறுகிய கால, நீண்ட கால  நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாசர்ம மருத்துவக் கல்லூரியின் தலைவர் வைத்தியர் ஸ்ரீயானி தெரிவித்துள்ளார்.  இதேவேள,இவ்வாறான காலநிலையில் தமது கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான பயிற்சிகளைவழங்குவது அவசியமாகும். காலநிலை மாற்றங்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைவெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்குமாறு … Read more

கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், கடன் சுமையற்ற மற்றும் கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன் என்றும் தெரிவித்தார். இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை நேற்று (14) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான பொருளாதார வேலைத்திட்டத்தில் … Read more

எதிர்வரும் சுதந்திர தின விழாவிற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஏனைய அரசியல் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைத்திட்டம்

சமூக சேவைகள் திணைக்களமும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைத்திட்டம் தொடர்பில்,கேகாலை மாவட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் ஆரம்ப நிகழ்ச்சி  (14) கேகாலையில் இடம்பெற்றது. குறிப்பாக வளர் முக நாடுகளில் மாற்றுத்திறனாளி சமூகம் எவ்வாறு வேலையில் அமர்த்தப்படுகிறது மற்றும் இந்நாட்டு சமூகத்தில் ஏற்படும் இடையூறுகளை இனங்கண்டு இந்நிலைமையைக் குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் என்பன கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும் கேகாலை மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டத்தில் அங்கவீனமுற்ற சமூகத்தினரை பணியமர்த்த கூடிய நிறுவனங்களை அடையாளம் காணும்  விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டது. … Read more

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பிரபல்யமாகும் ஆடு!(Video)

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இறுதி போட்டிக்கு ஆர்ஜென்டீனா அணி தகுதி பெற்றுள்ளது. இதன் பிரகாரம் இன்று நடைபெறும் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஆர்ஜென்டினா இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்ஜென்டினா அணி ஆறாவது முறையாக உலகக்கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் பிரகாரம் உலகக்கிண்ண வாகையர் பட்டத்தை முதல் முறையாக வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை மெஸ்ஸி பெற்றுக்கொண்டுள்ளார்.  மெஸ்ஸியின் அதிரடியான … Read more

சுற்றுலாத் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது…

நாடு முழுவதும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்வருகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  Ø  தீவு முழுவதும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை நகர அபிவிருத்தி அதிகாரசபை செய்ய முன்வருகிறது…  Ø  எல்ல சுற்றுலாத் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது…  Ø  அறுகம்பே, கல்பிட்டி, ஹிக்கடுவ மற்றும் நுவரெலியா சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில்.. நகர … Read more