அகில இலங்கை பெட்மின்டன் வெற்றிக் கிண்ண போட்டி 2022

இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் அனுசரணையில், கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தினால், அகில இலங்கை பெட்மின்டன் வெற்றிக் கிண்ண திறந்த போட்டி இன்று(14) ஆரம்பமானது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை போட்டி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக இப்போட்டி நடாத்தப்படுகின்றது.இதன் ஆரம்ப வைபவம் இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் எம். எச். எம் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் இந்நிகழ்வில் நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த, பெட்மின்டன் வீர வீராங்கனைகள் … Read more

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையைஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுரை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுரை மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். புனித தம்பதிவ யாத்திரைக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கும், … Read more

வடக்கு கிழக்கில் கால்நடைகள் உயிரிழப்பதற்கான காரணம்

கடந்த நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்ததற்கான காரணம் கடும் குளிர் நிலை ஆகும் என்று ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விலங்குகள் தொற்றுநோய் காரணமாக இறக்கவில்லை மாறாக, கடுமையான குளிர் நிலை காரணமாக இறந்துள்ளன என்று அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதிக வெப்பத்துடனான காலநிலைக்கு பழக்கப்பட்ட … Read more

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்படி, அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறும் வயதை 60ஆக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் இந்தக் கொள்கை நிலைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஓய்வுப் பெறப் போகும் பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய … Read more

இன்று நள்ளிரவு முதல், புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பிசில் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவதை இன்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. ஏதிர்வரும் 18 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதனால், இப்பரீட்சை முடிவடையும் வரை, பரீட்சார்த்திகளுக்கு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளன..   அத்துடன், இந்தப் பரீட்சை வினாப்பத்திரங்கள்  தொடர்புடைய வினாக்கள் வழங்கப்படுவதான சுவரொட்டிக்ள, … Read more

உலக கிண்ண கால்பந்து – இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார். 34ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு … Read more

விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்க கமத்தொழில் அமைச்சு நடவடிக்கை

போலி தராசுகளை பயன்படுத்தி விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்க அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து கூட்டு வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் எடை மற்றும் அளவீடுகளுக்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான தராசுகள் நடைமுறைக்கு  உட்பட்டதா இல்லை. இதனால், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவுசெய்வோர் அவர்களை சுரண்டும் முறை நாடுபூராகவும் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். புளத்சிங்கல பிரதேசத்தில் விவசாய சேவை நிலையம் ஒன்றினால் வழங்கப்பட்ட … Read more

நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோட்டா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது. தாக்குதல்  கடந்த மே 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் … Read more

 எல்ல சுற்றுலாத் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது…

நாடு முழுவதும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்வருகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  Ø  தீவு முழுவதும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை நகர அபிவிருத்தி அதிகாரசபை செய்ய முன்வருகிறது…  Ø  எல்ல சுற்றுலாத் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது…  Ø  அறுகம்பே, கல்பிட்டி, ஹிக்கடுவ மற்றும் நுவரெலியா சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில்.. நகர … Read more

பாடசாலை அப்பியாச புத்தகங்கள், உபகரணங்களை கூடுதலான விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை குறிப்பிட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசேடமாக பாடசாலை அப்பியாச புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளில் மாற்றங்களை மேற்கொள்ள … Read more