Zoom இணையதளம் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை

வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுவோரின் வசதி கருதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணையதளம் மூலமான தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. Zoom  இணையதளம் மூலம் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிகழ்வு நாளை (15) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதற்கு: Zoom link: https://us06web.zoom.us/j/87390780373… Meeting ID : 873 9078 0373 Passcode : 708892    

இலங்கையின் மூலோபாய திட்டத்தை (CSP) உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிறைவேற்றுச் சபை அங்கீகரித்துள்ளது.

இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இலங்கையின் மூலோபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் 2023-2027 க்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு (UNSDCF) … Read more

சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது! நள்ளிரவு முதல் நடைமுறை

சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்  இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சீமெந்தின் புதிய விலை இதன்படி, 225 ரூபாவினால் சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2750 ரூபாவாகும், முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை 2975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.  Source link

லீசிங் நிலுவைக்காக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கல்

லீசிங் நிலுவைத் தொகை காரணமாக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.  நிதி இராஜாங்க அமைச்சரின் பணிப்புரை கடந்த நாட்களில் அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் போது குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததாக தெரியவருகிறது.  அவ்வாறான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை … Read more

2022 சர்வதேச நீர்மாநாடு இலங்கையில் இன்று ஆரம்பம்

2022 சர்வதேச நீர்மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு இரத்மலானை நீர் வழங்கல் சர்வதேச கேட்போர் கூடத்தில் இன்று (14) பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும். இன்று முதல் 16 ஆம’ திகதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். குடிநீர் தொடர்பான நூற்றுக்கும் அதிகமான புத்திஜீவிகளும் பொறியியலாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.. 48 நாடுகளின் நிபுணர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். … Read more

'சதோச' வில் ,5 பொருட்கள் விலை குறைப்பு

‘சதோச’ 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக  புதிய விலைகள் இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக  லங்கா சதொச தெரிவித்துள்ளது.   விலை குறைப்புக்கு அமைவாக  ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.   கோதுமை மா ஒரு கிலோ  15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 250 ரூபாவாகும்.   ஒரு கிலோ பூண்டு அல்லது உள்ளி 35 ரூபாவினால் … Read more

தபால் ஊழியர் வேலை நிறுத்தம் முடிவு

தபால் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது திணைக்களத்தின் ஊழியர்கள் வழமையான முறையில் நேற்று (13) சேவைக்கு திரும்பியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களாக வழமையான முறையில் தபால் பொதிகளின் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்

இறக்குமதிக்கு தடை! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.  அரிசி இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதியின் பணிப்புரை அதன்படி இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற வர்த்தமானியை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த … Read more

காங்கோவில் நிலச்சரிவு – 120 பேர் உயிரிழப்பு

காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் பாதைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளன. பாதைகளில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 … Read more