பூமிக்கு திரும்பியது நாசாவின் 'ஓரியன்' விண்கலம்

நிலவில் ஆய்வை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நேற்று முன்தினம் (11) பூமிக்குத் திரும்பியுள்ளது. ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு அதன் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அது நேற்று முன்தினம் (11) இரவு 11.10 மணிக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரையிறங்கியது. இந்த ‘ஓரியன்’ விண்கலம் கடந்த மாதம் 16 ஆம் திகதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் … Read more

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது. தங்க அவுன்ஸ் 649,160.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,900.00 24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 183,200.00 22 கரட் 1 … Read more

10 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் புவியியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்தன மற்றும் அவரது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டின் மீது தாக்ககுதல் நடத்திய  சம்பவம்  தொடர்பாக அடையாளங்காணப்பட்ட பத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தாக்குதலின் போது அதனை நேரில் கண்ட அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் … Read more

மருத்துவமனை ஊழியர் போதைப்பொருளுடன் கைது

173 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் கனிஷ்ட சுகாதார உதவியாளரை நாளை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கனிஷ்ட சுகாதார உதவியாளர் கேகாலை வைத்தியசாலையில் இருந்து சில காலமாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் சிவில் ஒருவரைப் போல் நடித்து, குறித்த நபரிடம் இருந்து மூன்று வகையான 40 … Read more

இறைச்சி கடைகளின் பரிசோதனையை அதிகரிக்க பொது சுகாதார பரிசோதகர்கள்…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் இறப்பதைக் கருத்தில் கொண்டு இறைச்சிக் கடைகளின் சோதனைகளை அதிகரிக்க இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதுஇ பல பகுதிகளில் முறையான அனுமதியின்றி மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி என்பன விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத வெளிநாட்டு வேலைக்கான  கடத்தல் தொடர்பில் தகவல்கள்

ஜோர்தானைப் பரிமாற்ற தளமாக பயன்படுத்தி, இலங்கையர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக சட்டவிரோதமான முறையில் அழைத்துச் செல்லும் கடத்தல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம். இவ்வாறான முறையில் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்ல வேண்டாம். இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் அவதானமாக இருக்குமாறும் மக்களை கேட்டுக் கொள்வதாக பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் … Read more

இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆட்கடத்தல் சம்பவம்! ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை

இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜோர்தான் ஊடாக பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களின் மற்றுமொரு மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற காத்திருக்கும் இலங்கையர்கள், ஆட்கடத்தல்காரர்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்குமாறும் பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு … Read more