சேனா படைப்புழு பரவலை கட்டுப்படுத்த முடியும்

இம்முறை சோளப்பயிர்ச் செய்கைக்கு, சேனா படைப்புழுக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேனா படைப்புழுக்கள் மூலம் சோளப் பயிர்கள் சேதம் அடைந்த சம்பவங்கள் இதுவரை 04 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் பிரதான விவசாய நிபுணர் கலாநிதி புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சேனா படைப்புழுவினால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பம் தற்போது விவசாயத் திணைக்களத்திடம் உண்டு. அது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒட்டுண்ணி … Read more

அம்பாறை ,மன்னார் நகர சபைகள்: மாநகர சபைகளாக மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை, மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படும் நகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக இந்த நகர அபிவிருத்தி பணிகளை செயல்திறன் மிக்கதாகவும் விரைவாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் … Read more

இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய குடிமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இந்த தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மருந்து, உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தினசரி மின்வெட்டு இருப்பதாகவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தால் பொருத்தமான பயணக் காப்புறுதியைப் பெற்று, அது போதிய … Read more

தபால் திணைக்களத்தின் செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கான எந்த பேச்சு வார்த்தைக்கும் தயார்

சம்பளம் மற்றும் ஓய்வூதிய சம்பளத்திற்காக செலவிடப்படும் தொகை பாரியது என்பதினால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் செலவை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2023 ஆம் ஆண்டில் எந்தவித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்வதற்கோ அல்லது மேலதிக கொடுப்பனவை செலுத்துவதற்கோ  நிதியை ஒதுக்கீடு செய்யாதிருப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக வெகுஜன ஊடக ,பெருந்தெருக்கள் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று … Read more

பொல்காவலை – கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படும்

பொல்காவல ரயில் கடவையில் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதால் பொல்காவல – கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இம்மாதம் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் இம்மாதம் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் இந்த வீதி மூடப்பட்டிருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பருக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேசசபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் இறுதி வாரத்தின் 5 வேலை நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என அதன் ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இவ்வருடம் டிசம்பர் 26 முதல் 30ஆம் திகதி வரையில் அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டம் 2017இன் விதிகளின்படி 2023 பெப்ரவரி பிற்பகுதியில் … Read more

இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட ஐந்து வங்கிகளுக்கு எதிராக மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்ட விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குறித்த வங்கிகளுக்கு நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அபராதம் விதிக்கப்பட்டுள்ள வங்கிகள் டீஎப்சீசீ, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதமாக வசூலிக்கப்பட்ட பணம் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Source link

அவதானமாக செயற்பட வேண்டும்! இலங்கையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமையுடன் (11.12.2022) ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் மேலும் ஓரிரு … Read more

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து விசேட அறிவிப்பு

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார். ஓய்வூதியர்களின் உயிர்வாழ்வுச் சான்றிதழை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது … Read more

சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொட அமைச்சர் பணிப்பு

அரசாங்கத்தின் நிதி வசதிகள் கிடைக்கும் வரை சுயநிதிப் பொறிமுறையின் ஊடாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடருமாறு அமைச்சின் செயலாளருக்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பணிப்புரை விடுத்தார்… அரசாங்கத்தின் நிதி வசதிகள் கிடைக்கும் வரை சுயநிதிப் பொறிமுறையின் ஊடாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சில வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் … Read more