நான்கு நாட்களுக்கான மின்துண்டிப்பு குறித்த அறிவிப்பு

இன்று (13) முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை, நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்துண்டிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக  ‘A’ முதல் W’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு இடம்பெறும்.

சீன இராணுவத்தின் அத்துமீறல்: இந்திய இராணுவம் கொடுத்த பதிலடி

இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன இந்நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.  ஜூன் 2020 இல், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பீடபூமியை ஒட்டிய இந்திய மற்றும் சீன துருப்புக்கள் கைகோர்த்து போரில் ஈடுபட்டன. இந்த சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் சீனா வெளியிடப்படாத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்தித்தது. சீன இராணுவத்தின் அத்துமீறல்  அதன் பின்னர் இரு நாடுகளுக்கு … Read more

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மோசடி நடவடிக்கைகள்  குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.   மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக செயற்படுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு தெரிவித்து பாரிய மோசடி நடவடிக்கைகள் … Read more

பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரொலாண்டோ பி கோமஸ் இன்று (டிசம்பர் 09) பத்தரமுல்ல அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார். கேர்ணல் கோமஸுக்கு அன்பான வரவேற்பை வழங்கிய பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு ஆலோசகருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜெனரல் குணரத்ன மற்றும் கேர்ணல் … Read more

இயந்திரவியல் காலாட் படையினரால் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 வது காலாட் படைப்பிரிவின் 661 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் நன்கொடையாளரின் அனுசரணையுடன் செல்லிபுரம் கொல்லகராச்சி கிராம சேவை பிரிவில் முறையான வீடு இல்லாத குடும்பத்திற்கு 3 டிசம்பர் 2022 அன்று அவருக்கான புதிய வீட்டை நிர்மாணித்து பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. 66 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பிரியதர்ஷன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 661 வது காலாட் … Read more

மருந்துக் கொள்முதலுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து

மருந்துக் கொள்முதலுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு கவலை இந்திய அரசாங்கம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் சுகாதார அமைச்சுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளபோதும் அவற்றை அரசதுறையினர் மருந்துக் கொள்முதலுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய … Read more

மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்தது

பாடசாலைகள் இன்று முதல் திறக்கப்பட்ட போதிலும், தற்போது நாட்டில் நிழவுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்தது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில்; சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக் கவசம் அணிவது சிறந்தது என்று சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். ‘தற்போது நிழவுகின்ற குளிர் மற்றும் தூசி நிலை காரணமாக மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் … Read more

தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்! பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி… புகைப்படங்கள்

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். தமிழ் மீதும் தமிழர் மீதும் காதல் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ் திறமையை … Read more