நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது – ஜனாதிபதி

தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே ஜனாதிபதி இன்று (08) இதனைத் தெரிவித்தார். நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் வகையில் பிழையான தீர்மானங்களை எடுத்தவர்கள் குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த … Read more

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  … Read more

மேகமூட்டமான வானம் :100 மி.மீக்கும் அதிகமான பலத்தமழை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 08 ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள “Mandous” என்றசூறாவளியானது இன்று காலை 0830 மணிக்கு வடஅகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம்கொண்டிருந்தது. அதுமேற்கு- வடமேற்குதிசையில் நகரக்கூடிய  சாத்தியம்உயர்வாகக் காணப்படுவதுடன், டிசம்பர் 09ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு … Read more

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் நவம்பர் 26 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார். இதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ தாரக்க பாலசூரிய, கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, கௌரவ ஜீவன் தொண்டமான், கௌரவ அகில எல்லாவல, கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, … Read more

வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2023 ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (08) பாராளுமன்றத்தில், 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் ,எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் கடந்த மாதம் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. எதிராக 84 வாக்குகள் மாத்திரமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது..

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே தெரிவு  

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே அண்மையில் (03) தெரிவுசெய்யப்பட்டார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரன முன்மொழிந்ததுடன், அதனைப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வீரசுமன வீரசிங்ஹ மற்றும் கௌரவ எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் வழிமொழிந்தனர். அத்துடன், பிரதித் தலைவர்களாக கௌரவ மஞ்சுளா திசாநாயக்கவும், கௌரவ … Read more

சீரற்ற காலநிலை: நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் .அவதானத்துடன் செயல்படுமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மலையகத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசியதினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனைத்தொடந்தே இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் இவ்வாறு அறிவித்துள்ளார் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, … Read more

தேவையான நிதி உதவியை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம்

எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் விசேட அறிவுறுத்தல்

தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள “Mandous” புயல் சூறாவளியாக  தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பலத்த மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக மாசடைந்த காற்று துகள்கள் வளிமண்டலத்தில் கலப்பதனால் வளிமண்டலம் மேகமூட்டமாக காணப்படும்.  இதனால் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும். வெளியில் நடமாடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (08) காலை முதல் … Read more

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு இந்த வருடம் 2300 முறைப்பாடுகள்

2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சுமார் 2300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வழக்கமாக நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணைச் சட்டம் தொடர்பான முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. மேலும், ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற தெளிவற்ற முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணைக்கு எடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் தொடர்பாக மற்றும் அரசாங்க அதிகாரி ஒருவரை பணயக் கைதியாக பிடித்து இலஞ்சம் வாங்கத் தயாராக … Read more