நாளை மின் துண்டிப்பு : 2 கட்டங்களில் ,2 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

நாடு முழுவதும்  நாளை (05)  2 மணி 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணி 20 நிமிடங்கள  மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி 

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி  அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கு அவர்கள் விரும்பினால் அனுமதிக்கலாம்.கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ,இவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுலா பயணி பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சுற்றுலா தொழில்துறையினை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கமாகும். 15 இலட்சம் சுற்றுலா பயணிகளை அடுத்த வருடம் இலங்கைக்கு அழைத்து … Read more

தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் தலைமையில் உபகுழு  

ஒழுங்குமுறைப்படுத்தலுடன் தேசிய கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக தலைமையில் உப குழுவொன்றை அமைப்பதற்கு அண்மையில் (01) நடைபெற்ற குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த உபகுழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன ஆகியோரும், நிதி … Read more

ரயில் சேவை நேர அட்டவணை: நாளை முதல் கட்டம் மறுசீரமைப்பு

தற்போதைய ரயில் சேவை நேர அட்டவணை, நாளை முதல் கட்டம் கடட்மாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.. இதற்கமைவாக , களனிவெளி ரயில் சேவையின் நேர அட்டவனை நாளை முதல் மறுசீரமைக்கப்படுவதாக அவர் கூறினார ஐந்து மற்றும் பத்து நிமிடங்களினால் இந்த ரயில் பயண நேரம் மறுசீரமைக்கப்படும். அலுவலக ரயில் சேவைகளில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன மேலும் தெரிவித்தார்..

இந்தியா மற்றும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள கடல் பயணம்

வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் சுற்றுலா அபிவிருத்தி சபையின் … Read more

காணாமற்போனோர் தொடர்பாக, 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள்

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் அலுவலகத்திற்கு 1969ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் காணாமற்போனோர் தொடர்பாக 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். குறித்த முறைகளில் தெரிவுசெய்யப்பட்ட ஆறாயிரத்து 78 முறைப்பாடுகள் பற்றிய ஆரம்ப கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆயிரத்து 710 முறைப்பாடுகளின் விசாரணை பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கிளிநொச்சியில் இன்றும் விசாரணைகளை மேற்கொண்டனர் இந்த … Read more

75ஆவது சுதந்திர தின விழாவில்,ஒரு தாய் மக்களாக அனைவரும் ஒன்றுபட சட்டத்தரணிகளது பங்களிப்பு இன்றியமையாதது – ஜனாதிபதி

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது போல நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் பங்களிப்புச் செய்தால் இந்த இலக்கை அடைய முடியுமென்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார். மேலும், இது எளிதான விடயம் அல்லாத போதும் சாதிக்க முடியாத விடயம் என்பதற்கில்லை என்றும் … Read more

மன்னார் முள்ளிக்குளம் காற்றாலை மின்சார மைய திட்டம் காலதாமதாகும்

மன்னாரில் உள்ள முள்ளிக்குளத்தில் இலங்கை மின்சார சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச 34-டேர்பைன் காற்றாலை மின்சார நிலையப் பணிகள் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், அந்தப் பகுதியின் வளமான பறவை இனங்கள் மற்றும் புலம்பெயர் பறவையினங்கள் மீது, குறித்த மின்சார நிலையத் திட்டம், தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை ஆராயுமாறு கோரப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த திட்டப்பணிகள் தாமதமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  83 பறவையினங்கள் இனங்கள் பாதிக்கப்படும் காற்றாலைகளிலிருந்து எழும் இயங்கங்களால்,பறவைகள் மற்றும் வெளவால்கள் … Read more