பாலினம், சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம்! – ஜனாதிபதி

பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை … Read more

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். 44 ஆயிரம் மாணவர்கள் இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாகவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 44 ஆயிரம் மாணவர்கள் தமது உயர்க்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  Source link

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நாளை தொடக்கம் மழை

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நாளை (02) தொடக்கம் பிற்பகல் வேளையிலும், காலை நேரத்திலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது: 2022 டிசம்பர் 2ஆம் திகதியிலிருந்த நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கு மற்றும்கி ழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது … Read more

பாடசாலை இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 ஆம் ஆண்டின் பாடசாலை இரண்டாம்  தவணை இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கமைவாக பாடசாலை மூன்றாம் தவணை எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை மூன்று கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும். அதன் முதல் கட்டம்;, எதிர்வரும் 5 அம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஆண்டு ஜனவரி 2ஆம் … Read more

கல்வியில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய உடன்பாடு அவசியம்

கல்வியில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் எட்டாவது நாள் இன்று (01). கல்வி ,பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்,”சர்வதேச ரீதியல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் அமைப்பதன் முக்கியத்துவத்தையும்” … Read more

வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் புதுத்தெம்புடன் செயற்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையின் செயற்பாடகளும் அந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் ஓழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்தள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (01.12.2022) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் … Read more

முடிவுக்கு வராத அரசியல்! தக்க தருணத்திற்காக காத்திருக்கும் கப்ரால்

எனது அரசியல் மற்றும் தொழிற்துறை வாழ்க்கை இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.  தகுந்த வாய்ப்புக்கள் கிடைத்தால் நாட்டுக்கு மீண்டும் சேவையாற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் என்னை நம்ப ஆரம்பித்தேன்.. ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  எவருடைய அரசியல் பயணத்திலும் வெற்றிகள் தோல்விகள் கண்டிப்பாக இருக்கும். ஏனையவர்கள் என்னை சந்தேகிக்க தொடங்கியவேளை நான் என்னை நம்ப ஆரம்பித்தேன் என்றும் அவர் … Read more

வடக்கு , கிழக்கில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதி 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மனித நேய கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 648,148 அமெரிக்க டொலர்கள் (சுமார் 232 மில்லியன் ரூபாய்) தொகையை வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. Mines Advisory Group (MAG) அமைப்புக்கு இந்தத் தொகை வழங்கப்படும். இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 2022 நவம்பர் 30 ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் MAG இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லென்னன் ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டது. ஜப்பானிய … Read more

சாணக்கியனுக்கு சீனா வழங்கியுள்ள பதிலடி

இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில், இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் உரையாற்றிய போது, சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. உண்மையான நண்பராக இருந்தால், ஏன் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா உதவவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் குறித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், சீனத் … Read more