100 குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் வழங்கல்

622 வது காலாட் பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் 100 குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் வழங்கல் 62 வது காலாட் படைப்பிரிவின் 622 வது காலட் பிரிகேடின் படையினரின் ஒருங்கிணைப்புடன் வன்னிப் பிரதேசத்தில் கடுமையான பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி நிவாரணம் வழங்கி அந்தக் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 100 குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள், உலர் உணவுப் பொதிகள் … Read more

பணம் வேண்டாம்! ஆடம்பரம் வேண்டாம்… எல்லாவற்றையும் துறந்த 22 வயதான பணக்கார பெண்

இந்தியாவில் செல்வந்தராக வாழ்ந்து வந்த இளம்பெண்ணொருவர் துறவியாக மாறியுள்ளார். துறவறம் புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திலால் ஜெயின். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் சலோனி ஜெயின் (22). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் துறவியாக மாற முடிவு செய்து, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சலோனி முடிவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். வரும் 4ம் திகதி பெங்களூருவில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் … Read more

பராபவ சூத்திரம் தர்மத்தையே போதிக்கிறது! எதிர்க்கட்சித் தலைவர் தர்மத்தையும் தேரர் சங்கத்தையும் குழப்பிக் கொண்டுள்ளார்!! – ஜனாதிபதி.

பராபவ சூத்திரம் தர்மத்தையே அன்றி, தேரர் சங்கம் குறித்து போதிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று (29) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.   தேரர் சங்கத்தின் தர்மத்தின்படி நடந்துகொள்ளாவிடின், பிரச்சினைககள் ஏற்படும் என்றும் இந்தநிலை, கௌதம புத்தரின் காலத்தில் இருந்து தொடர்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.   தேரர் சங்கத்தினரின் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க மகா சங்கத்தினருக்கு அதிகாரம் வழங்கப்படுவது குறித்த கருத்தாடலை ஏற்படுத்தும் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி … Read more

இலங்கையர்கள் இந்திய ரூபாயை வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு ஒப்புதல்

இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரம் இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய … Read more

இலங்கையில் ,இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டங்கள்

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் மூலமாக 2022 நவம்பர் 26ஆம் திகதி “இந்திய அரசியலமைப்பு தினம்” அனுஷ்டிக்கப்பட்டது. 1949 நவம்பர் 26ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதை இந்த விசேடதினம் குறித்து நிற்கின்றது. 02.   2022 நவம்பர் 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 200க்கும் அதிகமான சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்தனர். நாகரீக அடிப்படையிலான தமது பங்காளியான இந்தியா தொடர்பாக … Read more

முல்லைத்தீவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்ட கலந்துரையாடல்

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் (CSIAP) முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் தொடர்பான இரண்டாவது மாவட்ட வழிப்படுத்தல் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இன்று (29) காலை மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த திட்டத்தின் … Read more

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (28.11.2022) மாலை மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 27ஆம் திகதி தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உறவினர்களால் சடலம் அடையாளம் உயிரிழந்தவரின் உறவினர்களால் … Read more