அரச ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கு விசேட பிரிவு

அமைச்சின் ஊழியர்கள் அல்லது அதிகாரிகளினால் ஊழல், மோசடி அல்லது முறைகேடுகள் மேற்கொள்ளப்படடிருந்தால், அல்லது அது குறித்து தகவல் தெரிந்திருந்தால், குற்றப்குலனாய்வுப் பிரிவுக்கு நேரடியாக எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்; ஊடக வியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். … Read more

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது தற்போதைய கொள்கையாக அமைய வேண்டும்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது தற்போதைய கொள்கையாக அமைய வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ,வெகுஜன ஊடக அமைச்சரும்; போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டிற்கு பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர்த்து, சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் … Read more

உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கை தமிழ் இளைஞன்

இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் இளைஞன் ஒருவர் செயற்பட்டுள்ளார். கட்டாரில் உலகளாவிய ரீதியிலுள்ள காற்பந்தாட்ட ரகசியர்கள் குவிந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார். கட்டாரில் … Read more

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த இலங்கை தமிழரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வியட்நாம் முகாமில் 37 வயதுடைய சுந்தரலிங்கம் கிரிகரன் என்பவர்  தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தந்தையின் முகத்தை கடைசியாக குழந்தைகளுக்கு காட்ட உதவுகள் என்று இலங்கையில் வாழும் அவரது மனைவி உருக்கமாக வேண்டுகோளினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தார். இந்நிலையில், அரசாங்கத்தரப்பிலிருந்து இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையரின் சடலத்தை கொண்டு வருவதில் சிக்கல் உயிரிழந்த இலங்கையரின் உடலை … Read more

பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம்

பொருளாதாரத்தை வலுப்படுத்த பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரமன்றி ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம் என்று வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தகவல் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் என்பன பலப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கிராமத்தை நோக்கிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தேசிய நெருக்கடியின் போது, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அந்த நிறுவனங்களை மேலும் … Read more

சுப்பர் மார்க்கெட் பொருட்களை கொள்வனவு செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை

பேருவளை நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த பெண் ஒருவர் நான்கு சொக்லேட்களை திருடியதாக கூறி தாக்கப்பட்டுள்ளார். இதானல் சுப்பர் மார்க்கெட் ஊழியர்கள் நால்வர் அவரை மேல் மாடிக்கு இழுத்து சென்று கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் காயமடைந்த பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, கடை ஊழியர்கள் நால்வர் பேருவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பையில் நான்கு சொக்லேட்டுகளை மோசடியான முறையில் வைத்திருந்ததாக கூறி அந்த பெண் மீது தாக்குதல் … Read more

உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை

சில மருந்து வகைகளுக்கான கேள்வி மனு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவை  நாட்டை வந்தடைய சில மாதங்கள் செல்லும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இதேவேளை ,தேவையான உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் எந்தத் தட்டுப்பாடும் இல்லையென செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான நீங்கிவிடும். மருந்து இறக்குமதிக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மருந்து … Read more

இலங்கை பறவைகளின் ,பாதுகாப்பு நிலை குறித்த, புதுப்பிக்கப்பட்ட பதிவு – 2021

இலங்கை பறவைகளின் பாதுகாப்பு நிலை குறித்த புதுப்பிக்கப்பட்ட சிவப்பு தரவுப் பதிவு – 2021, வெளியீட்டு நிகழ்வு சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் ,சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நசீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில் “சுற்றாடலை பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பு. அந்த பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் உண்டு. பறவைகள் நம் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவை.  … Read more

இலங்கையை வந்தடைந்த பாரிய பயணிகள் கப்பல்

உலகின் பாரிய கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. Mein Schiff 5 என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளது. குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கப்பலில் 2030 வெளிநாட்டு பயணிகளும் 945 பணியாளர்களும் உள்ளனர் என்றும் பெரும்பாலான பயணிகள் ஐரோப்பியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சுற்றுலா பயணிகளை இறக்கிய பின் இங்கிருந்து 30ஆம் திகதி … Read more