சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் … Read more

கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கும் காரணம் இதுவே! வெளிப்படுத்தினார் மைத்திரி

தமக்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும், ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இதுவே தமது காலத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கும், கோட்டாபய, நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கும் காரணமாக இருந்தது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிப்பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆயுதப்படைகள் மத்தியில் மறுசீரமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக, இந்தக் கருத்தை அவர், பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது தெரிவித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்  “புலனாய்வு அமைப்புகளால் தனக்கும், … Read more

சிறந்த 100 புகைப்படங்களில் கோட்டாபயவின் அலுவலக புகைப்படம்

2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராபக்ஷ பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தின் புகைப்படம் சர்வதேச டைம் சஞ்சிகையின் சிறந்த புகைப்படமாக தெரிவாகி உள்ளது. இந்த புகைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி அன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது எடுக்கப்பட்டதாகும். அபிஷேக் சின்னப்பா என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. … Read more

சிறந்த 100 புகைப்படங்களில் கோட்டாபயவின் அலுவலக புகைப்படம்

2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராபக்ஷ பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தின் புகைப்படம் சர்வதேச டைம் சஞ்சிகையின் சிறந்த புகைப்படமாக தெரிவாகி உள்ளது. இந்த புகைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி அன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது எடுக்கப்பட்டதாகும். அபிஷேக் சின்னப்பா என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. … Read more

அமைச்சரவையின் தீர்மானம்! மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விசேட வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வயதாக குறைக்கும் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும்  அமைச்சரவைக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 176 விசேட வைத்தியர்கள் தங்களது கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைக்கும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.  விசேட வைத்தியர்கள் இருதயவியல் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், நரம்பியல், … Read more

ருஹுணு கல்லூரி மோதல்: 6 மாணவர்கள் விளக்கமறியலில்

ருஹுணு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் மாணவர்கள் அனுமதி  சம்பவத்தில் காயமடைந்த 12 மாணவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு … Read more

கல்முனை வடக்கு முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் முன்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு  உபகரணங்கள் இன்று (28) வழங்கப்பட்டன. வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் சிறுவர் செயலக அனுசரணையில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாபா.A.K.ஹனாவின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் .T.J.அதிசயராஜின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 14 முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்

வியட்நாமில் உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கட்டணத்தை வழங்குவதற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அண்மையில் படகு மூலம் கனடாவுக்கு செல்ல முயன்ற 303 இலங்கையர்கள் சர்வதேச கடலில் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது … Read more