ஐரோப்பாவில் வரலாறு காணாத உயர் வெப்ப நிலை பதிவு

ஐரோப்பிய கண்டம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத அளவு உயர் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.  கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பதிவான சராசரி வெப்ப நிலையை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இந்தாண்டு பதிவாகியுள்ளதாக கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை மையம் தெரிவித்துள்ளது. தீவிர வானிலை ஏற்படும் ஆபத்து இது தொடர்பில் ஐ.நா. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புவி வெப்பமடைதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், … Read more

75 ஆவது சுதந்திர தினத்தன்று:திரையரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு 50% கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகள்

75 ஆவது சுதந்திர தினத்தன்று, தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை 50% கட்டண கழிவில் பார்வையிடுவதற்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில், இதற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு: 01.    75 ஆவது சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கு மற்றும் திரைப்படங்களை … Read more

யாழில் வல்லைப்பாலத்தில் தவறி விழுந்து இளைஞரொருவர் மாயம் (PHOTOS)

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல்போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகின்றது. இன்று (22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று இளைஞர்கள் பொதுமக்களால் பிடிப்பு இதன்போது இளைஞரொருவர் தவறி விழுந்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு தவறி விழுந்துள்ள நிலையில் … Read more

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நாடளாவிய ரீதியில் மாபெரும் தொடர் போராட்டம்..!

இலங்கை டெலிகொம் நிறுவனத்தை லைக்கா மொபைலுக்கும் அதானிக்கும் விற்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக நாளை (23) முதல் நாடளாவிய ரீதியாக மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப செயலாளர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார். “அரசாங்கத்திற்கு வருமானம் தரும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விற்பனையை உடனடியாக நிறுத்து” என்ற தலைப்பில் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளினால் நேற்று (21) கொழும்பு குரு மதுர மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பசில்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சர்ச்சை நிலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பசில் ராஜபக்ஷவுக்கு, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மகத்தான வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்நிலையில் எந்தவொரு பதவியையும் கொண்டிருக்காத பசில், விமான நிலையத்தின் அதிமுக்கிய நபர்கள் வெளியேறும் பகுதியால் வெளியேறியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்திய பசில் ராஜபக்ஷ, … Read more

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உத்தரவாதப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உத்தரவாதப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டு நிகழ்வுகள் கடந்த 20 ஆம் திகதி, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாத வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் மாம்பே சனச மண்டபத்திலும் ஹொன்னந்தர வடக்கு ஸ்ரீ விஜயானந்தனாராம விகாரையிலும் நடைபெற்றன.   கெஸ்பேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாம்பே கிழக்கு மற்றும் மாம்பே வடக்கு கிராம சேவைப்பிரிவுகள் இணைந்து … Read more

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை உருவாக்கும் ஏற்பாடுகள் ( Campaign Finance bill) தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபகக்ஷ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட  போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்து  தெரிவிக்கையில்….. சமூகத்திற்கும் நாட்டிற்கு,  நேர்மையாக,பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதில்இ சரியான தீர்மானங்களை … Read more

சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல்

தற்போது சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது என்று கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். நுரையீரலுடன் தொடர்புப்பட்ட நோய் நிலைமை சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்!

Courtesy: கட்டுரை: யதீந்திரா சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்திய தரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது. மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கின்றேன். இது சரியானதொரு பார்வைதானா -என்னும் கேள்வி இருந்துகொண்டேயிருந்தது. 2002இல், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மானுடத்தின் தமிழ் கூடல் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் மு. … Read more

உள்ளுராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம்

இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு கலந்தாலோசித்து, வாய்ப்புக்களை வழங்குவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சிறி டொல்வத்த இது தொடர்பான தனியார் சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் இன்று (22) சமர்ப்பித்து உரையாற்றிய போது குறிப்பிட்டார். இது இளைஞர் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி சபைகளில் அதிகரிக்கும் நோக்கில் அதற்கான சூழலை உருவாக்குவதற்காகவும் பொருத்தமான சட்டமூலமாக இது பாராளுமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்கிணங்க தெரிவுசெய்யப்படவுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25வீதத்திற்கு இளைஞர்களை … Read more