ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை விஜயம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ,ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (22) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய 28 பேரைக்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2 குழுக்கள் என்ற ரீதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர். இதில் முதலாவது குழு இன்று காலை 8.30 க்கு டுபாயில் இருந்து எமிரேட்ஸ் சேவை கே 650 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 14 பேரை கொண்ட … Read more

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான்: சாணக்கியன் பதிலடி- செய்தித்தொகுப்பு (Video)

பிள்ளையானின் ஊழல் மோசடிகளை கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22.11.2022) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  “நான் சபையில் இல்லாத போது சக நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு பொய்யான குற்றச் சாட்டுக்களை என் மீது சுமத்தியுள்ளார். நான் காணிகளை அபகரிப்பதாகவும், ஆள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். … Read more

மீனவர்களுக்கு முறையாகவும், தொடர்ச்சியாகவும் மண்ணெண்ணெய் வழங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் அவர்கள் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். இதன்படி, மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீனவர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை … Read more

அரச ஊழியர்களின் உடைகள் தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு

அரச ஊழியர்களின் உடை தொடர்பிலமற்றுமொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இதன்படி, அரச ஊழியர்களின் உடைகள் தொடர்பான சுற்றறிக்கையை மதிப்பீடு செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, நாடாளுமன்றில்  இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டின் பல பாகங்களில் உள்ள ஆசிரியைகள்  நேற்றையதினம் புடவைக்கு பதிலாக மாற்று உடைகளை அணிந்து வந்திருந்தனர்.  அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடைகள்  இந்தநிலையில், குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சியின் … Read more

வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

வரவு செலவு திட்டம் இரண்டாம வாசிப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

ஓமான் தூதரகத்தின் ,மூன்றாவது செயலாளரை கைதுசெய்ய நடவடிக்கை

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நடத்தப்பட்ட, 25 இடங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளினால் ,இந்த வருடத்தில் முற்றுகையிடப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக இலங்கையில் இருந்து ,ஆட்களை அனுப்பி மோசடி செய்த 190 சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் இன்று (22) பாராளுமன்றத்தில் கூறினார். இதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ,பணி இடைநிறுத்தப்பட்டு இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு … Read more

ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை – முப்படையினரும் அவசரமாக அழைப்பு

நாட்டிலுள்ள சகல மாவட்டங்கள் மற்றும் அதனை சூழவுள்ள கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியின் மூலம் இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. Source link

சமூக முகாமைத்துவத்திற்கான ஒரு சமூக ஒப்பந்தமே இம்முறை வரவுவெலவுத் திட்டம்: சுற்றாடல் அமைச்சர்

இலங்கை ஒரு புதிய நாடாக மிளிரப் போவதையே 2023 வரவுசெலவுத்திட்டம் கூறுகின்றது. இது ஒரு சமூக முகாமைத்துவத்திற்கான ஒரு சமூக ஒப்பந்தமே இம்முறை வரவுவெலவுத் திட்டம் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஆறாவது நாளான (21) நேற்று விவாதத்தில் பங்குபற்றிய அமைச்சர், 2023மார்ச் மாதம் முதல் அரசாங்கத்தின் அதிகமான கொடுப்பனவுகள் டிஜிடல் முறையூடாக மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால் நேரத்தை வீணடிக்காது, … Read more

வரவு செலவு திட்டத்திற்கு ,அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

திருத்தங்களுக்கு உட்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (22)  விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரச்சினை சவால்களை எதிர்கொள்ளும் கொள்கைக்கு அப்பால் எந்தவகையிலும் பொது மக்களை கைவிட்டு தாம் தப்பி போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற ரீதியில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதாக வரவு செலவு திட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

சொலமன் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல் (Video)

சொலமன் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் பதிவாகியிருந்ததையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  No #tsunami threat to Australia from magnitude 7.0 #earthquake near Solomon Islands. Latest advice at https://t.co/Tynv3ZQpEq. pic.twitter.com/EnkDZlTE8G — Bureau of Meteorology, Australia (@BOM_au) November 22, 2022 சாலமன் தீவுகளில் … Read more