சாரணர் இயக்கத்தை விஸ்தரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

சாரணர் இயக்கத்தை 2024 ஆம் ஆண்டாகும்போது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிப்பதற்கும் அதன் அங்கத்துவத்தை 02 இலட்சமாக அதிகரிப்பதற்கும் தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இதற்காக கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியவற்றின் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இலங்கை தலைமை சாரணர் மற்றும் போசகர் பதவிகளை இலங்கை சாரணர் இயக்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பசில்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சர்ச்சை நிலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பசில் ராஜபக்ஷவுக்கு, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மகத்தான வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்நிலையில் எந்தவொரு பதவியையும் கொண்டிருக்காத பசில், விமான நிலையத்தின் அதிமுக்கிய நபர்கள் வெளியேறும் பகுதியால் வெளியேறியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்திய பசில் ராஜபக்ஷ, … Read more

எரிபொருள் விநியோகத்திற்கான கியு.ஆர் முறை

எரிபொருள் விநியோகத்திற்கான கியு.ஆர் முறை அடுத்த மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வரை இந்த கியூ ஆர் முறை அமுலில் இருக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகரதனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய ஒக்டோபர் மாத விலைச் சுட்டெண் வீழ்ச்சி

2021 ஒத்தோபரிலிருந்து அதிகரிக்கின்ற போக்கில் தொடர்ந்து சென்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 73.7 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 70.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 85.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 80.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 62.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 61.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. … Read more

வரவு செலவுத்திட்டதின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2023 ஆண்டு வரவு செலவுத்திட்டதின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நாளை (23) முதல் ஆரம்பமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தாமரை கோபுரம்: 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற எதிர்ப்பார்ப்பு

தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் (LTMC) சிங்கப்பூரின் Kreate Design Pte உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஆண்டுக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை LTMC உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட புதுப்பித்தல் மற்றும் உள்துறை வடிவமைப்பு நிறுவனம் 44 ஆயிரம் சதுர அடி கொண்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் கோபுர தளத்தின் ஒரு தளத்தை குத்தகைக்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக … Read more

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலைகள் உயர்வு உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தக்காளி, கறி மிளகாய், போஞ்சி, லீக்ஸ், கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள், பழங்கள் மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன. உள்நாட்டு உருளைக் கிழங்கின் விலை கிலோ கிராமிற்கு 420 முதல் 500 ரூபாவாகும். ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 320 முதல் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் தக்காளியின் விலை 430 … Read more

19 கல்வியியல்  கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகம் அமைக்க திட்டம்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் பின்னர், தற்போதுள்ள 19 கல்வியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து ஒரு பல்கலைக்ழகமாக அமைத்து, அதில் பீடங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். அதன்படி, இந்த பல்கலைக்கழகத்தினூடாக பட்டதாரிகளை உருவாக்க எதிர்பார்க்கின்றோம் என்று கல்வி அமைச்சர் சுசில் பரேம்ஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (20) நடைபெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான, மக்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு அறிவித்தார். மேலும், பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் ஒருவரை … Read more

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். தெற்காசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பெறுமதி வலையமைப்புடன் இலங்கையை ஒருங்கிணைத்து அதனை கிழக்கு பிராந்தியத்திற்கும் விரிவுபடுத்துவதன் மூலம் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டு முயற்சியில் (RCEP) இணைந்து கொள்வதே ஜனாதிபதியின் விருப்பமாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.   இந்த அபிவிருத்திச் செயற்பாட்டின் இறுதிப் பயனாளிகளாக தனியார் துறை கைத்தொழில்கள் இருப்பதால் இதற்கு … Read more