சுயாதீன ஆணைக்குழு விரைவில் நியமிக்கப்படும்
சுயாதீன ஆணைக்குழு விரைவில் நியமிக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவற்றுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சபாநாயகர் கூறினார். சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரையாடலின் போது சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.