நீர் வழங்கலுக்கான செலவீனத்துக்கு ஏற்ற வகையில் நீர் கட்டணத்தை திருத்தவும்

நீர் வழங்கலுக்கு ஏற்படுகின்ற செலவீனங்களுக்கு ஏற்ற வகையில் நீர் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், நீர் வழங்கல் விவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு முன்மொழிந்துள்ளனர். ஒரு லீட்டர் நீரை வாடிக்கையாளர்களுக்கு இதுவரை 2 சதத்துக்கே வழங்கி வந்ததாகவும், அண்மையில் இதனை 5 சதமாக அதிகரித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், ஒரு லீட்டர் நீரைச் சுத்திகரிப்பதற்கு 12 சதம் முதல் 14 சதம் வரையில் செலவு ஏற்படுவதாகத் … Read more

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக சமர்ப்பிக்க நடவடிக்கை

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வருடாந்த அறிக்கைகளும் செயலாற்றுகை அறிக்கைகளும் அவற்றுக்கான மென் பிரதிகள் மூலம் தற்போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுவதோடு அந்த அறிக்கைகளின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வன் பிரதிகளை மட்டும் தேவையைக் கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காகவும் சபா மண்டபத்தில் மற்றும் நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  தாள்களுக்கான அதிக செலவு காரணமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக (Soft Copy) சமர்ப்பிப்பதற்கு கடந்த … Read more

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூஜின் ஜியோங் (Woonjin Jeong) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (17) சந்தித்தார். கொரிய சீமோல் அமைப்பின் தலைவர் லீ ஸோங் ஜொங் மற்றும் சீமோல் அமைப்பின் இலங்கைப் பணிப்பாளர் சோய் சுங் வூ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். சீமோல் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்திகளை விருத்தி செய்தல், கிராமிய மக்களை வலுப்படுத்தல் போன்ற சமூக அடிப்படையிலான திட்டங்கள் தொடர்பில் சீமோல் அமைப்பின் தலைவர் சபாநாயகருக்கு … Read more

மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ரணில் (Video)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.  மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  ரணில் விக்ரமசிங்க  மன்னார் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.  அதன் பின்னர், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, … Read more

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் பிறக்கும் போதே புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் பகுதியும் நீக்கப்படவுள்ளது. Source link

2022 உலக கிண்ண கால்பந்து போட்டி ஆரம்பம்

2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டி (2022 FIFA World Cup), கத்தார் நாட்டில் நேற்று (20) ஆரம்பமானது. இதனை முன்னிட்டு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பக இடம்பெற்றது. உலகின் 2ஆவது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கிண்ண கால்பந்து போட்டியாகும்.  22ஆவது உலக கிண்ண கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நேற்று (20) கோலாகலமாக ஆரம்பமானது. எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.மத்திய … Read more

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர்! சஜித் அணி தெரிவிப்பு

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். எமது நாட்டைப் பற்றிச் சிந்திக்கின்ற நாட்டுக்கு உதவி செய்ய விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்கள் அதிகம் உள்ளனர், இவர்களை நாம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  இனவாதம் இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இவ்வளவு காலமும் இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் செய்தது இனவாதத்தை … Read more

யூரியா பொதிகளை வழங்கும் போது அவற்றின் எடையை பரிசோதித்து வழங்க அமைச்சர் பணிப்பு

விவசாய சேவை மத்திய நிலையங்களில் இருந்து ,விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்கும் போது உர பொதிகளின் எடையை பரிசோதித்து விநியோகிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பெமடுவ விவசாய சேவை மத்திய நிலையத்தில் பதிவான சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த முறையினால் விவசாயிகள், விவசாய சேவை நிலையங்களில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் உர … Read more

தோட்டப் பெண்களை முகவர்களுக்கு விற்பனை செய்த பெண் கைது

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு பெண்களை அனுப்பி முறைகேடான தொழில்களில் ஈடுபட்ட் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  கைது செய்துள்ளது. . தோட்டப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்று பல்வேறு முகவர்களுக்கு விற்பனை செய்தவர் இவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.