ஆற்றில் குதித்த இளம் ஜோடி-யுவதி சடலமாக மீட்பு

கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுருஓயா ஆற்றின் கிளை ஆற்றில் இளம் ஜோடி குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட 25 வயதான யுவதி ஆற்றில் குதித்த இருவரில் யுவதியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக மினுவங்கொடை பொலிஸார் கூறியுள்ளனர். மினுவங்கொடை யட்டியன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான கே.லக்சானி தில்மிக்கா கீர்த்திரத்ன என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மினுவங்கொடை சமுர்த்திகம நுககஹாமுல்ல பாலத்திற்கு அருகில் நேற்று உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் … Read more

வடக்கில் பாரிய பசுமைத் திட்டங்கள் மற்றும் நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம்

வடக்கில் பாரிய பசுமைத் திட்டங்கள் மற்றும் நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம். – மின்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை அடையாளங்காண்பதற்கு மொரட்டுவை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் நிபுணத்துவ ஆதரவுடன் விசேட ஆராய்ச்சி நிலையம் – தலைமன்னார் இறங்குதுறையை ஜனாதிபதி பார்வையிட்டார் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி … Read more

“கிளைபோசெட்” பயன்பாட்டுத் தடை நீக்கம்

“கிளைபோசெட்”  பயன்பாட்டுத் தடை நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்தார். ஏழு வருடங்களுக்குப் பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் . இதுவிடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கிளைபோசெட் இரசாயன பதார்த்த்தை பயன்படுத்துவதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.   மன்னார் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.   அதன் பின்னர், நடுக்குடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, … Read more

கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வங்கிகளுக்கு ஆலோசனை 

கடந்த காலங்களின் மிதக்கும் வட்டி வீதத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு அறவிடப்படும் வட்டி வீதத்தை அதிகரித்ததனால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் தலைமையில் பாராளுமன்றத்தில்  (16) கூடிய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற … Read more

அல்ஹைதா ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் இலங்கையருக்கு உயிர்த்தஞாயிறுதாக்குதலில் தொடர்பா! விசாரணைகள் தீவிரம்

அல்ஹைதாவுடன் தொடர்புகளை பேணியவர் என சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளால் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை வர்த்தகர் முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசாருக்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பாரிய வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் பேருவளையை … Read more

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ,இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்றன

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்ற போதும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் என வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் தெரிவித்தார். இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷன்ஹோங் உடன் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை அண்மையில் (15) பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சீன விசேட பிரதிநிதி லிங் கொங்ரியன் இதனைத் தெரிவித்தார். … Read more

பெண்களை வலப்படுத்துவது தொடர்பாக தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்திசெய்யவும் – ஜனாதிபதி ஆலோசனை  

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலப்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது. மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் … Read more