உபகுழுவின் முன்னேற்றம் குறித்த சுருக்கமான அறிக்கை தேசிய பேரவையில் சமர்ப்பிப்பு

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான  நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் முதலாவது அறிக்கைமற்றும் தேசிய கொள்கைத்தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கானஉபகுழுவின் முன்னேற்றம் குறித்த சுருக்கமான அறிக்கை தேசிய பேரவையில் சமர்ப்பிப்பு தேசிய பேரவையினால் அமைக்கப்பட்ட ‘பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்காக உபகுழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் தேசிய பேரவையில்  (10) சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன்,  குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் … Read more

பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான அடிப்படைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம்

பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவின் பங்குபற்றலுடன் (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான அடிப்படை சட்டமூலம் குறித்து இங்கு வருகை தந்திருந்த உறுப்பினர்கள் விரிவாகக் கலந்துரையாடினர். இச்சட்டமூலத்தை மேலும் விரிவாக ஆராய்ந்து … Read more

இலங்கைக்கான கானா குடியரசு உயர்ஸ்தானிகர் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. குவாகு அசோமா-செரெமே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கானா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 நவம்பர் 11ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு.2022 நவம்பர் 11

டீசல் ,மண்ணெண்ணெய்: விலை அதிகரிப்பு

நேற்று (11)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக ஒரு லீற்றர் சிலோன் வைட் டீசலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன் புதிய விலை 430 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் புதிய விலை 365 ரூபாவாகும். சுப்பர் டீசல், ஒக்ரைன்-92 மற்றும் 95 பெற்றோல் என்பவற்றின் விலைகளில் எந்தவிதமான … Read more

சில இடங்களில் 75 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல்,சப்ரகமுவ,மத்திய,வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் … Read more

கடல் பகுதிகளில் ,இடியுடன் கூடிய மழை, பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022நவம்பர் 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் … Read more

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் –  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு கிராண்ட்பாஸ் புனித ஜோசப் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற விசேட … Read more

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை! கால அவகாசம் கோரும் ரணில் தரப்பு

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த நாட்டை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும், அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கோண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  மக்களின் நம்பிக்கை தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் … Read more

பொருளாதாரத்தின் மீட்சி காலம் குறித்து மத்திய வங்கி…

2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” என்ற தலைப்பில் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட விசேட வெளியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதித் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் மத்திய வங்கியினால் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், … Read more