சவூதி அரேபியாவில் ,இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கள்

சவூதி அரேபியாவில் நிர்மாண மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், வீட்டுப் பணிப்பெண்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறியியலாளர் அஹமட் பின் சுலைமான் பின் அப்துல் அஸீஸ் அல் ரஜ்ஹிக்கும் இடையில் (08) இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு, கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆட்சேர்ப்புக்காக இருதரப்பு … Read more

வரலாற்றில் முதற்தடவையாக மாணவர் பாராளுமன்றத் தேர்தலூக்காக இலத்திரனியல் வாக்குப்பதிவு எஹலியகொட தேசிய பாடசாலையில் ஆரம்பம்

முதன்முறையாக இலத்திரனியல் வாக்குப்பதிவு மூலம் தெரிவான மாணவர் பாராளுமன்றம் எஹெலியகொட தேசிய பாடசாலையில் அண்மையில் (04) கூடியது. அதற்கு சமாந்தரமாக ஜனநாயகம், இலங்கை பாராளுமன்ற முறைமை மற்றும் மரபுகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது. இந்த மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இதற்கு முன்னரான ஒரு தினத்தில் எஹெலியகொட தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட இந்த பொதுச் சேவைகள் நிகழ்ச்சி எஹெலியகொட தேசிய பாடசாலை அதிபர் டபிள்யு.ஏ.எம்.எச்.எம். … Read more

மின்வெட்டு நேரத்தில் ஏற்படும் மாற்றம்! வெளியான அறிவிப்பு

மின்வெட்டு நேரத்தில் எதிர்வரும் வார இறுதி மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்படும் மாற்றம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாரயிறுதியில் 1 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. என்ற போதும் நவம்பர் 14ஆம் திகதி 2 மணிநேர மின்வெட்டு நடைமுறையாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  மின்வெட்டு நடைமுறையாகும் விதம் நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் குழுக்கள் A, B, C, D, … Read more

கனகாம்பிகைக்குளத்தின் நீர் வழிந்தோடும் நிலை:மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவோடை கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனகாம்பிகைக்குளத்தின் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள போதிலும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கனகாம்பிகை குள நீர் கொள்ளனவிலும் பார்க்க நீர்மட்டம் காணப்படுகின்றமையால் மேலதிக நீர் வான் பகுதியூடாக வெளியேற்றப்படுகின்றது. இதனால் குளத்தின்  தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ … Read more

மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் விவசாய கடன் – யாழ் மாவட்டஅரசாங்க அதிபர்

யாழ் மாவட்ட மரக்கறி செய்கை விவசாயிகளுக்கும் விவசாய கடன் முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இது தொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். மாவட்ட விவசாயக் குழுக்கூட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (11) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நெல் செய்கை விவசாயிகளுக்கு 40,000 ரூபாவாக இருந்த விவசாய … Read more

புதிய தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

புதிய தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.  புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். அண்மையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர் Federico Salas Lotfe, இலங்கைக்கான பூட்டான் தூதுவர் Rinchen Kuentsyl, இலங்கைக்கான பரகுவே தூதுவர் Flemming Raul Duarte, இலங்கைக்கான லக்சம்பர்க் தூதுவர் Peggy Frantzen, இலங்கைக்கான ரஷ்ய … Read more

சூரிய மின்சக்தி உற்பத்தி : இந்தியாவின் எரிபொருள் செலவில் 34 ஆயிரம் கோடி ரூபா சேமிப்பு

சூரிய மின்சக்தி உற்பத்தியினால் இந்தியாவின் எரிபொருள் செலவில் 34 ஆயிரம் கோடி ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எரிசக்தி அமைப்பான ‘எம்பர்’ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகமாக உள்ள முதல் 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் ஆகியவையே அந்த நாடுகள். இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய … Read more

தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது

ஹுங்கம பிரதேசத்தில் தரம் ஐந்தை சேர்ந்த மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயாராகி வரும் மாணவியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குறித்த நபரை கைது செய்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். பெற்றோர் முறைப்பாடு இந்த ஆசிரியர் தனது மகளை தொடர்ச்சியாக தாக்கி வருவதாக பொற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான மாணவி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாணவியின் … Read more

பகிடிவதை முறைப்பாடுகள் சிஐடியிடம் ஒப்படைப்பு

பகிடிவதை தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான அதிகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா வழங்கியுள்ளதாகவும் ,பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பகிடிவதை சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள், விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக பல சம்பவங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. களனி பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உட்படுத்திய … Read more