கிறீன் கார்ட்க்கான (Green Card ) விண்ணப்பம்

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்தின் கீழ் நேற்று முதல் (05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த Green Cardடுக்கான விண்ணப்பிப்பங்கள் இணைய தளத்தின் ஊடாக நேற்று (5) இரவு 09.30 மணி முதல் நவம்பர் 08 ஆம் திகதி இரவு 10.30 மணி வரை  ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளமான https://dvprogram.state.gov வழியாகச் சமர்ப்பிக்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விசா திட்டம் 2024 … Read more

போலி வழக்கு பதிவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் மூவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

58 வயதுடைய பெண் ஒருவரை போலியான குற்றச்சாட்டு வழக்கு ஒன்றின் அடிப்படையில் கைது செய்தமைக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து மொத்தமாக 5 இலட்சம் ரூபாவை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத் தீர்ப்பினை நீதியரசர் விஜித் மலல்கொடவுடன் இணைந்து நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன வழங்கி உள்ளனர். குறித்த மனுதாரர் கைது செய்யப்படும் போது ‘தேடப்படும் சந்தேகநபராக’ இருந்த போதிலும், கைது செய்யப்பட்ட … Read more

செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைக்கு அரசாங்க நிதி குழுவின் அனுமதி

இலங்கை முதலீட்டுச் சபை உரிய மதிப்பீடுகைள வழங்கத் தவறியமையால் நேற்று (03) அனுமதி கிடைக்கப்பெறாத 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2291/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைக்கு 04.10.2022 கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 04.10.2022  மு.ப. 9.00 மணிக்கு சகல தகவல்கள் மற்றும் மதிப்பீடுகளுடன் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முதலீட்டுச் சபைக்கு 03.10.2022 அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) … Read more

கிரிஉல்ல கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்தின் பங்கேற்புடன் ஆரம்பமானது  

கிரிஉல்ல கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக தலைமையில் அண்மையில் (24) கிரிஉல்ல விங்ரமசிங்ஹ தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை மாண மாணவியர்களுக்கு ஜனநாயகம், பொறுப்புக் கூறல், வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் நடைமுறையான வாய்ப்புக்களை பாடசாலை சமூகத்துக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே மாணவர் பாராளுமன்றத்தின் நோக்கமாகும். ஜனநாயக வாழ்க்கை முறையின் அனுபவத்தை பாடசாலை மாணவ மாணவியருக்கு வழங்கும் நோக்கில் கிரிஉல்ல … Read more

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினரானாக நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து  இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஷ்வரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார். தேசிய பேரவையின் அடுத்த கூட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.

கோபா குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் ஏகமனதாகத் தெரிவு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் ஏகமனதாக இன்று (05) தெரிவுசெய்யப்பட்டார். அவரின் பெயரை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.பி திஸாநாயக முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிரோஷன் பெரேரா அதனை வழிமொழிந்தார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழுவின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக கௌரவ கபீர் … Read more

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் திருத்தங்களுடன் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேகர தலைமையில் நேற்று (04) நடைபெற்றபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக பெற்றோலிய இறக்குமதி, வழங்கல் மற்றும் விநியோகம் பெற்றோலியக் … Read more

உலக சிறுவர் தினத்தன்று தேசிய மிருகக்காட்சிசாலைக்கு அதிகூடிய வருமானம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இவ்வருடம் அதிகூடிய வருமானத்தைப் பெற்ற நாளாக, உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 01ஆம் திகதியன்று பதிவாகியுள்ளது. தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலை அன்றைய தினம் 50,80,377 ருபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.   அதேநேரம், உலக சிறுவர் தினத்தன்று ஏனைய அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் அதிகூடிய வருமானத்தை ஒரே நாளில் பெற முடிந்ததாக தேசிய விலங்கியல் திணைக்களம் நேற்று (04) கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் அறிவித்துள்ளது.   இதன்படி அன்றைய தினம், பின்னவல … Read more