மதுப்பாவனை வீழ்ச்சி

தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் நாட்டில் மது பாவனை கடந்த காலத்தில் 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கலால் வரி திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு பின்னர் (27)இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே குணசிரி கொரோனா தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு 22 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டதாக கூறினார்.

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் 29ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க … Read more

இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தும்

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களின் இறக்குமதித் தடையை அரசாங்கம் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 23 அன்று அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய உற்பத்திகள் அல்லது அத்தியாவசிய மற்றவை என்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதனால்எரிவாயு, எண்ணெய், … Read more

புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் உருவாக்கிய தருணத்தை நாசா விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட திகிலூட்டும் காணொளியை வெளியிட்டுள்ளது. இயான் புயல் அந்த அளவில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பேரின் வீடுகள் புயலில் தூக்கி வீசப்பட்டது. 2.6 மில்லியன் வீடுகள் மற்றும் தொழில் செய்யும் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கினர். பல பேர் உடைமைகள் இழந்து வீடுகளை இழந்து நகரங்களை விட்டு வெளியேறியனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்பட்ட … Read more

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும்

உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு நேற்று (30) முற்பகல் மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை கவனத்திற்கு கொண்டு … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு  30- 40கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி ,முன்பள்ளி பிள்ளைகளுக்காக காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நவம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் ,கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்கு பொதிக்கான தொகையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார். ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி முன்பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு வழங்கும் மாவட்ட வேலைத்திட்டம் … Read more

தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்01ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில்சிலஇடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் … Read more