பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் , நடைமுறைகள் குறித்த தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி கொழும்பு ஆனந்த கல்லூரியில்

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு அண்மையில் (27) கொழும்பு ஆனந்தக் கல்லூரியில் நடைபெற்றது. கொழும்பு ஆனந்த கல்லூரியின் உயர்தர மாணவர்களின் அரசியல் விஞ்ஞானம் குறித்த பாடத்தின் திறன்களை மேலும் வலுப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கமாகும் என்பதுடன், இதில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். கொழும்பு ஆனந்த கல்லூரியின் அரசியல் விஞ்ஞான மன்றத்தின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அப்பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் … Read more

ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற 'தேசிய பேரவையின்' முதலாவது கூட்டம்

தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களின் தலைமையில் நேற்று (29) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்திலேயே … Read more

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி கடற்றொழில் அமைச்சரினால் திறப்பு

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (29) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறக்கப்பட்டது. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்காக புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கடற்றொழில் அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் இராதாகிருஷ்ணன், பாடசாலை … Read more

இன்று 2.20 மணி நேர மின் துண்டிப்பு 

நாடு முழுவதும்  இன்று (29) 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று  பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு  அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் ABCDEFGHIJKL | PQRSTUVW : – … Read more

எந்தவெரு சந்தர்ப்பத்திலும் போசாக்கின்மை உணவு பற்றாக்குறை எற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது

மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு கையிருப்பு மற்றும் போசாக்கு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (28) மாலை 3.00 மணிக்கு செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங் அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் பொருளாதாரப் புத்துயிர் கேந்திரநிலையங்களை வலுவூட்டல் தொடர்பாக சனாதிபதியின் மற்றும் பிரதம மந்திரி அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைவாக மாவட்ட மாகாண பிரதேச கிராம மட்டங்களில் ஸ்தாபிப்பது தொடர்பான துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக … Read more

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோ நிதி உதவி

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வரும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி மூலம் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவியை அத்தியாவசிய தேவை தேவைப்படும் குடும்பங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இலக்காகக்கொண்டு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையில் மில்லியன் … Read more

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 செப்டம்பர் 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில்  சந்தித்தார். அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் ஷால்க் ஆகியோர் பல்வேறுபட்ட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்தளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், பொருளாதார நெருக்கடி முதல் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் வரையிலான முக்கியமான விடயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். நல்லிணக்கம், ஊக்குவித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான தேசிய முயற்சிகள் தொடர்பாக … Read more