இலங்கை
ஜனாதிபதி இன்று ஜப்பான் பிரதமர் மற்றும் பேரரசரை சந்தித்தார்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida) இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை அன்புடன் வரவேற்ற ஜப்பானிய பிரதமர், ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்தார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இதேவேளை, ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் … Read more
ஜப்பானில் வேலைக்கு அமர்த்தப்படும் இலங்கை தொழிலார்களுக்கு சலுகைகள்
இலங்கை தொழிலாளர்களை ஜப்பானில் வேலைக்கு அமர்த்தும் போது இலங்கையால் வழங்கப்படவுள்ள சலுகைகள் பற்றி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ,ஜப்பானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இலங்கையின் நலன் விரும்பி ஜப்பான் அதிகாரிகளுடனான சந்திப்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. இதன்போது ,இலங்கை பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகின்றனர்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77ஆவது அமர்வின்போது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் முகமாக விசேட நிகழ்வு
2022 செப்டம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77ஆவது அமர்வின்போது இந்திய சுதந்திரத்தின் மகிமைமிகு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விசேட நிகழ்வு ஒன்றும் நடைபெற்றிருந்தது. “இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் இந்திய-ஐ.நா ஒத்துழைப்பு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் சேபா கொரோஷி, ஐ.நா சபையின் பிரதி செயலாளர் நாயகம் அமினா ஜே மொஹமட், மற்றும் ஆர்மேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா, சைப்ரஸ், காம்பியா, கயானா, … Read more
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் ,அறபு மொழிப் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு ,பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ‘இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக சமூக-பொருளாதார அபிவிருத்தி‘ எனும் தொனிப்பொருளில் முதுநிலை விரிவுரையாளர் எச்.எம்.ஏ. ஹில்மியின் ஒருங்கிணைப்பில் இன்று (28) நடைபெற்ற ஆய்வரங்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதம பேச்சாளராக மலாயா பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அகடமி துணைப் … Read more
சமூக வலைதளங்களுக்கு அரச ஊழியர்கள் கருத்து தெரிவிப்பது தொடர்பில் சுற்றறிக்கை
அரச ஊழியர்கள் சமூக வலைதளங்களுக்கு கருத்து தெரிவிப்பது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு
நீராவி கசிவு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 03 வது அலகு மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 03 முதல் 05 நாட்களுக்குள் திருத்தும் பணிகள் இலங்கை மின்சார சபையால் (CEB) முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் (Twitter ) தளத்தில் நேற்று (27) பதிவிட்டுள்ளார். பழுது பார்க்கும் பணிகள் முடியும் வரை மின்சார உற்பத்தியை முகாமை செய்வதற்கு எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நுரைச்சோலை … Read more
எரிபொருள் தொடர்பில் ……
பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக கூறினார். எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் 118 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு நிலை
இந்தியாவில் 118 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சு (27) நேற்று வெளியிட்டது. இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 118 நாட்களில் பதிவான மிகக்குறைவான தினசரி கொரோனா பாதிப்பாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 75 ஆயிரத்து … Read more