இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை மகளிர் அணி நேற்று (28) காலை பங்களாதேஷ் பயணமானது.

பங்களாதேஷில் நடைபெறும் இந்த போட்டியில் சமரி அதபத்து தலைமை தாங்குகிறார். அணியின் தலைவர் சமரி அதபத்து அங்கே செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது அணி போட்டிகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.

ஆசிய வெற்றிக்கிண்ண மகளிர் போட்டி தொடர் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெறும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.