இலங்கை
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெறுவதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரை இன்று (27) சந்தித்தார். இச்சந்திப்பில் பிரதித் தூதுவர் ஒரிலியன் மெய்லிட் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இத்தருணத்தில் இணைந்துகொண்டார்.
மட்டக்களப்பில் மாவட்ட இலக்கிய விழா – 2022
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் (27) திகதி செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் கலாநிதி முருகு தயாநிதி … Read more
தேசிய பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில்
பாராளுமன்ற தீர்மானத்தின் மூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய பேரவையின்’ அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ‘தேசிய பேரவை’க்கு பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியல் சபாநாயகரினால் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
ரோம் நகருக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியுடனான சந்திப்பின் போது இலங்கைக்கான அமெரிக்க உதவியை வெளிவிவகார செயலாளர் வரவேற்பு
ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சிண்டி மெக்கெய்னை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2022 செப்டெம்பர் 26ஆந் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் மெக்கெய்ன், உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் அமெரிக்கப் பிரதிநிதியாவார். உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி … Read more
நீர்ப்பாசன திணைக்களத்தில் 29 ஆம் திகதி நவராத்திரி விழா
நீர்ப்பாசன திணைக்களத்தின் தமிழ் கலாச்சார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி விழா, எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இந்த விழா பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நிகழ்வில் பிரதம பேச்சாளராக பொறியியலாளர் நிஹால் ஸ்ரீவர்த்தன கலந்துகொள்ளவுள்ளார். திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்வில் இரத்மலானை இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான மின்னியல் சந்திப்பு நியமன முறைமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவினால் அறிமுகம்
மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை எஸ்.எல்.டி. மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இது கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதியளிப்பதாக அமையும். மின்னியல் சந்திப்பு நியமன முறைமையானது, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான … Read more
இன்றும் (27) நாளையும் (28) 2.20 மணி நேர மின் துண்டிப்பு
இன்றும் (27) நாளையும் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 … Read more
கந்தளாய் ஆயிஷா மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு செயலமர்வு
எதிர்வரும் 28 ஆம் திகதி சர்வதேச தகவலறியும் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கந்தளாய் ஆயிஷா மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று நடைபெற்றது. தகவல்கள் மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளில் வகிக்கும் வகிபாகம், தகவல் வகை, தகவல் சட்டத்தின் வரலாறு, இலங்கையும் தகவல் சட்டமும், தகவல் சட்டத்தின் முக்கியத்துவம் உட்பட பல விடயங்களை உள்ளடக்கி மாணவர்களுக்கு ஏற்புடைய அடிப்படையில் இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் தகவல் சட்டம் தொடர்பான வழிகாட்டி கையேடும் வழங்கப்பட்டமை … Read more