77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக்கை

2022 செப்டம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக்கை கௌரவ தலைவர் அவர்களே, கௌரவ பொதுச் செயலாளர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,   இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தலைவர்களை ஒன்று கூடுகின்ற ஒரு அவையான ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் … Read more

வடக்கு ,வடமத்திய கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர்25ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ஊவா, வடக்கு,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில்மாலையில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் … Read more

இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் நேற்று (24) வெற்றிபெற்றது. இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதாத்தில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து … Read more

பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தைக்கு, சூரிய சக்தி படகு சேவை

பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தைக்கு சூரிய சக்தி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனடிகும்புர முதல் வெள்ளவத்தை வரையில் சூரிய சக்தியில் இயங்கும் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா- இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது இறுதி T20 போட்டி

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் இறுதி T20 போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (25) நடைபெறுகிறது. அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த இரண்டாவது T20 போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்துகாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குஅல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் … Read more

கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (23) கலந்துகொண்டார். 59வது வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சந்தன மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை ஊவா மாகாண பிரதம சங்க நாயக்கவும் கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் விஹாராதிபதியுமான மஹரகம நந்தநாயக்க தேரர் மற்றும் உடவௌ … Read more

உயர்கல்வி இராஜாங்க அமைச்சரை பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்திக்க முடியும்

நாளை  26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனை சந்திக்க முடியும். பொதுமக்கள் சந்திப்பதற்கு முன்னதாக 011 2687 637 / 011 2687 510 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது Book an Appointment  என்ற லிங்க் (Link ) ஊடாக இதற்கான முன் பதிவுகளை செய்து கொள்ள வேண்டும்.