hgyvyu

பயிற்சித் தகைமை இல்லாத மற்றும் தொழில் அனுபவம் உள்ளவர்களும் இப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவாய்ப்பு இருப்பதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். வெல்டிங், கிரைண்டிங், பெயிண்டிங் போன்ற துறைகளில் திறமையானவர்கள் கொரியாவில் தொழில்களுக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக கொரிய மொழித் தேர்ச்சித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை இலங்கையர்களுக்கு ஜப்பான் தற்போது வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் … Read more

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார். நேற்று (12) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் அமைச்சர் அலி சப்ரி எடுத்துரைத்தார் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் … Read more

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும்

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில் ,தற்காலிகமாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறினார்.. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக … Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை

ஜெனீவாவில் 2022 செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை தலைவர் அவர்களே, பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் சபையுடனான எமது ஈடுபாட்டை ஒத்துழைப்பு, உரையாடல் என்ற உணர்வில் தொடர்வதற்குமான எமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஆரம்பத்தில் எமது அரசாங்கத்தின் சார்பாக மீண்டும் வலியுறுத்துகின்றேன். 46/1 தீர்மானத்தை நாங்கள் திட்டவட்டமாக … Read more

இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக உள்ளது!

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு பல்வேறு துறைகளின் ஊடாக ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு பல்வேறு துறைகளின் ஊடாக ஒத்துழைப்பு வழங்க தயார் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யொகோயமா (Kenichi Yokoyama)  தெரிவித்துள்ளார். இவர் உள்ளிட்ட பிரமுகர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். இதன் போது ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை … Read more

ஆசிய வெற்றி கிண்ணத்தை கைப்பற்றிய இரு அணிகளுக்கும் அமோக வரவேற்பு

ஆசிய வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் இரண்டும் இன்று (13) அதிகாலை நாடு திரும்பின. மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகள் இன்று அதிகாலை 12.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை கிரிக்கெட் வீரர்கள்  அதிகாலை 4.55 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த இரு அணி வீரர், வீராங்கனைகளை விமான நிலையத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ரோஹண … Read more

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கடமைகளை பொறுப்பேற்பு

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்றைய தினம் (12) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பல்கலைக்கழகங்கள் சமுதாயத்திற்கு கணக்கு ஒப்புவிக்கும் இடங்களாக மாற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள மக்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இடங்களாக இந்த உயர் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு சிறையில் இருந்து 29 கைதிகள் விடுதலை

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண் கைதி உட்பட 29 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Media Unit, – Batticaloa ஊடகப்பிரிவு- … Read more

முடிந்தளவு பாடங்களை கற்பிக்கும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தல்

இந்த வருடத்தின் இரண்டாவது பாடசாலை தவணை இன்று ஆரம்பமானது. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 02ம் திகதி வரை இடம்பெறும். இந்த காலப்பகுதிக்குள் முடிந்தளவு பாடங்களை கற்பிக்கும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடவிதானத்திற்கு புறம்பான வெளிவாரியான செயற்பாடுகளை பாடசாலை நேரத்திற்கு அப்பால்பட்ட சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடம்பெறும் வைபவங்களை முடிந்தளவு மட்டுப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்புமற்றும்காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் சிலஇடங்களில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் வரையான … Read more