இலங்கை
மினுவாங்கொடையில் கப்பம் கோரியதற்காக ஹால் சமீர கைது
பல குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதற்காக ‘ஹால் சமீர’ எனப்படும் வர்ணகுலசூரிய கிறிஸ்டெபுகே சமீர சம்பத் பெர்னாண்டோவை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மினுவாங்கொடை கெசல்கொட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.. சந்தேக நபர் 36 வயதுடைய நபர் எனவும், அவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் 2015 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வர்த்தகர்களிடம் … Read more
நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் …..
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் இன்று (23) நடைபெற்றது. நிலையியற் கட்டளை இலக்கம் 121ற்கு அமைய அண்மையில் தெரிவுக் குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கமைய 2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் … Read more
ஆர்மேனியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத் தயார் – இலங்கை ஜனாதிபதிக்கு ஆர்மேனியா ஜனாதிபதி உத்தரவாதம்
ஆர்மேனியா குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக மேலும் வலுவூட்ட அர்ப்பணிப்பதாக ஆர்மேனியா ஜனாதிபதி வகக்ன் கச்சதுரியன் (Vahagn Khachaturyan) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஆர்மேனியா ஜனாதிபதி , இலங்கையின் முன்னேற்றத்திற்காக திரு.விக்ரமசிங்க அவர்களின் அர்பணிப்பையும் பாராட்டியுள்ளார். நற்புறவான இலங்கை மக்களுக்கு நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு, வெற்றி மற்றும் சமாதானத்தை பிரார்த்திப்பதாகவும் ஆர்மேனியா … Read more
அரச ஊழியர்கள் குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1 கடந்த மே மாதம் 09ம் திகதி பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் … Read more
இலங்கையில் (23.08.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இலங்கையில் (23.08.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91
அரச பல்கலைக்கழங்கள் அனைத்தும் செப்டெம்பர் மாதம் மீண்டும் திறப்பு
அரச பல்கலைக்கழங்கள் அனைத்தும் செப்டெம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படவுள்ளன. பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். கொரோனா பரவலைத் தொடர்ந்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு வருடங்களில் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணைய வழி மூலம் ( ஒன்லைன்) முறையில் இடம்பெற்றது. எரிபொருள் போதிய அளவில் கிடைக்கப் பெறாததால், பல்கலைக்கழகங்களின் சில பீடங்களில் கல்வி … Read more
நாட்டில் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டுள்ளதால், இந்த பயங்கரமான வைரஸ் அடிமட்டத்தில் இருந்து கட்டுப்பாடில்லாமல் பரவி வருகின்றது. எந்த நேரத்தில் பேரழிவு நிலை உருவாகலாம் தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் நோய் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் … Read more
வசந்த முதலிகே விவகாரத்தால் ஜெனிவாவில் இம்முறை சிக்குமா இலங்கை அரசாங்கம்
ஐ.நா. விசேட அறிக்கையாளர் வேண்டுகோள் விடுத்து 24 மணி நேரத்துக்குள் அதனைப் புறந்தள்ளி தூக்கிக் கடாசிவிட்டு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாகவே இந்த நடவடிக்கைக்கு சர்வதேச சமூகமும் அதிருப்தியை எதிர்வினையாற்றியுள்ளது. ரணிலின் நடவடிக்கை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் … Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் – அரசாங்கம் தீர்மானம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதெடர்பாக அமைச்சர் மேலும் தெnரிவிக்கையில், குறித்த சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் … Read more