ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம், இலவசமாக உணவளிக்க முடியாது : வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனே வெளியேறவும் – அனுராதபுரத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்

கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கோரவில்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு காலதாமதம் செய்யாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் இன்று … Read more

யாழில் அதிகாரிகளை அச்சுறுத்திய துப்புரவு பணியாளர்

மதுபோதையில் பணியில் ஈடுப்பட்ட துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலய உற்சவம் நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று(20) அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை யாழ் மாநகர சபை உறுப்பினர் அவதானித்துள்ளார். இதையடுத்து குறித்த துப்புரவு பணியாளரை மறுநாள் கடமையில் ஈடுபடுமாறும் மதுபோதையில் இருந்து பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் கூறுமாறு மேற்பார்வையாளருக்கு … Read more

மழையுடனான காநிலையில் சற்று அதிகரிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஓகஸ்ட்21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஓகஸ்ட்21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதியில் (மேல்மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை சற்றுஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்கண்டி, நுவரெலியா,காலிமற்றும்மாத்தறைமாவட்டங்களிலும்அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவாமற்றும்கிழக்குமாகாணங்களில்சிலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக … Read more

எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Sapugaskanda Refinery does not produce Super Diesel, 95 Petrol or any other Premium Products. It Produces Auto Diesel, 92 Petrol, … Read more

முட்டைக்கு விலை நிர்ணயம்

முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் நிர்ணய விலை 43 ரூபா என்று அறிவிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை நேற்று முதல் அமலுக்கு வருவதாக … Read more

தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

ஒமைக்ரோன் தொற்றில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரோன் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளை உலக … Read more

2022 ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு

எதிர்வரும் சனிக்கிழமை (27) ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் … Read more