அம்பாறை மாவட்டத்தில் ,வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 99 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி இது தொடர்பாக தெரிவிக்கையில் , கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார். … Read more

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்றைய தினம் (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக பல்வேறு கொரோனா தடுப்பு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதன் முதற்கட்டமாக அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் 136 சிறைச்சாலை … Read more

மே 09 வன்முறை சம்பவங்கள்:3310 பேர் கைது

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3310 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்த 858 சம்பவங்கள் தொடர்பில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 1182 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 2128 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சோளம் பயிரிடும் விவசாயிகள்: இணை வழி பதிவு ஆரம்பம்

சோளம் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை இணைய வழி (Online)பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டம் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக செயல்படுத்தப்படும். அனைத்து விவசாயிகளின் தகவல்களையும் உள்ளடக்கிய தகவல் அமைப்புடன் கூடிய செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த இலத்திரனியல் பதிவு மூலம், நாட்டில் சோளம் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு தேவையான யூரியா உரத்தின் அளவு, அவர்கள் பயிரிடும் நிலத்தின் அளவு, பெறக்கூடிய அறுவடையின் அளவு, … Read more

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து

துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி சென்ற அகதிகள் படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு விபத்து உள்ளாகி மூழ்கியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் பகுதியில் 50 … Read more

கோட்டாபயவுக்கு ஆதரவாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனு தாக்கல்..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான அவருக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டாரா கோட்டாபய கடந்த ஜூலை 18ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம்  முன்னாள் … Read more

அவசரகால நிலை சட்ட விதிகளை நீடிப்பதற்கு அங்கீகாரம்

பாராளுமன்ற்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி, இன்று (12) அவசரகால நிலை சட்ட விதிகளை நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.. இதன்படி, அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பாராளுமன்றத்தினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகியதையடுத்து, கடந்த மாதம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலையில் இருக்கவும்!! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1. 30 ஆண்டுகளாக நாட்டில் இருந்த புலிகளின் பயங்கரவாதம் இந்த பொருளாதார நெருக்கடிக்கு … Read more