இலங்கையில் (12.08.2022), கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இலங்கையில் (12.08.2022), கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் (12.08.2022), கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162
மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வருடத்தில் மொத்தமாக 967 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இதுவரையில் மாவட்டத்தில் மொத்தமாக 40 நபர்கள் கொரோனா … Read more
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு இரத்தக்கசிவு நிலை காரணமாக ஏழு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குழந்தைகள் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இயன்றளவு திரவ ஆகாரங்களை வழங்க வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க விடவும்,இ அவர்களுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை வழங்கவும் என்று வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறுவதினால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த வாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன் அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடுபவர்கள் கறுப்பு … Read more
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததுடன் ,இதனை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் மத்திய வங்கி ஊடாக செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இன்னும் 650 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று பிற்பகல் நிலவரப்படி கப்பல் 650 கடல் மைல் தொலைவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு தினங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி, கப்பல் சுமார் 650 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும், கப்பல் தொடர்பில் வெளியுறவு அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை … Read more
கட்டணம் அறவிட்டு, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு எரி சக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது..
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை போன்ற நாட்டின் அரச சொத்துகள் கையகப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் … Read more
ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் … Read more
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட சகல வாகனங்களுக்கும் போதியளவிலான எரிபொருள் வழங்கப்படும் என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணைதளத்தில் இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.