கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி இறுதி ரந்தோலி

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா தற்போது வீதி உலா இடம்பெறுகிறது. இன்று மாலை 6.35க்கு பெரஹரா வீதி உலா ஆரம்பமானது. இதேவேளை, கதிர்காம தேவாலய எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவும் இன்றிரவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க கிரிக்கட் சபை: ரி-20 லீக் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வீரர்கள்

இலங்கை அணி வீரரான துஷ்மந்த சமீரவின் ஒப்பந்தத்தின் பெறுமதி இரண்டு லட்சம் அமெரிக்க டொலர்களாகும். சாமிக்க கருணாரட்ன ஒரு லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். மஹிஸ் தீக்ஷன ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றார். அகில தனஞ்ஜய, நிரோஷன் திக்வெல்ல, சீக்குகே பிரசன்ன, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ போன்ற வீரர்களும் இந்த சுற்றுத்தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ,தென்னாபிரிக்க கிரிக்கட் சபை ஒழுங்கு செய்யும் ரி-20 லீக் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் … Read more

தேசிய விளையாட்டு சபையின் புதிய உறுப்பினராக தளபதி நியமனம்

கிரிக்கட் அணி முன்னாள் தலைவர் திரு. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான தேசிய விளையாட்டு சபைக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று(10) புதிய உறுப்பினர்கள் டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு சபை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டதன் பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையின் … Read more

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விருந்தினர் விரிவுரை தளபதியினால்

இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிஸாரின் மிக உயர்ந்த கல்வி கற்கும் இடமான கொழும்பு 3 தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (10) தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி இல 1 யின் ‘தளபதி விரிவுரை’ இனை மாணவ அதிகாரிகளுக்கு வழங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அழைக்கப்பட்டார். ‘தேசிய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை இராணுவம்’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த விரிவுரையானது, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு சவால்கள் மற்றும் … Read more

பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் முடிவு எடுங்கள்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வகிக்கும் பீல்ட் மார்ஷல் பதவி சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். உயிர் தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் இறுதியான போராட்டத்திற்கு கொழும்புக்கு வருமாறும் உயிர்களை தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் … Read more

ஜனாதிபதி தலதா பெரஹரவை பார்வையிட்டார்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹர இன்று (11) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பெரஹரவை பார்வையிட்டார். இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2022-08-11

மாகாண நிர்வாகம் , அபிவிருத்தியின் ஒழுங்கான செயல்முறையைப் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவின முகாமைத்துவப் பொறுப்பு ஆளுநர்களுக்கு

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள், இது குறித்து அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இன்றைய சவாலான காலகட்டத்தில், பொதுச் செலவினங்களை முகாமைத்துவம் செய்து, பொது மக்களுக்கான சேவைகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது. மாகாண சபை … Read more

நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம் ,ஜனாதிபதியின்  கொள்கைப் பிரகடன உரையில் அடங்கியுள்ளது

தொழிற்சங்கங்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அடங்கியுள்ளதாக அவைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (10)  தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் … Read more