லங்கா பிரிமியர் லீக் எதிர்வரும் டிசம்பர் மாதம்

லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. ஐந்து அணிகள் இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. இறுதிப் போட்டி டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவையாகவும் லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. 

இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம்

நாட்டில் இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அலகுகளுக்கான கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறுகையில், இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. நாட்டில் 78 இலட்சம் வாடிக்கையாளர்கள், மின்சாரத்தை பெறுகின்றனர். அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காகவும், … Read more

விரைவில் லாஃப்ஸ் கேஸ் விலையும் குறைக்கப்படும்

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின்  விலையை குறைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். விலைத் திருத்தம்  நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது விலைத் திருத்தத்தை மேற்கொள்வதாகவும், லாஃப்ஸ் கேஸின் விலை மற்றும் விநியோக முறை தொடர்பில் ஏதேனும் வாடிக்கையாளர் முறைப்பாடுகள் … Read more

மேலும் பலர் கைது

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜுலை … Read more

 ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேகநபர், கடுவெல பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட் கற்சுரங்கப்பகுதிக்கு  அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய … Read more

பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர். இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குறிப்பாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாக, நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத வெளிநாட்டு குடியேற்றவாசிகள் வாராந்தம் சுமார் 20 பேர் என்ற … Read more

QR நடைமுறை வெற்றி…

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் அல்லது QR நடைமுறையின் ஊடாக கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள 1246 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சுமார் 43 இலட்சம் வாகனங்களுக்கு 36,599,301 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், கடந்த வார இறுதி வரை 55 இலட்சத்திற்கும் அதிகமானோர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களிலிருந்து இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களுக்கு பொதுவான … Read more

அலரி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக ஒருவர் நபர் கைது

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ஆதிமலை தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 53 வயதுடைய கொழும்பு-03 பகுதியைச் சேர்ந்தவர். சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் … Read more

கொட்டாஞ்சேனை வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளை…

கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் கைவிலங்குடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், வீட்டில் வசிக்கும் யுவதியின் கையை துணியால் கட்டி, கணவன் மற்றும் மனைவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் துப்பாக்கி இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில், வீட்டு உரிமையாளர்களை அறையில் … Read more