மலையக ரயில் சேவை நாளை மறுதினம் முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும்

மலையக ரயில் சேவை நாளை மறுதினம் (09) செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா ரயில்நிலையங்களுக்கிடையில்,இடம்பெற்ற மண்சரிவு , மண் மேடுகள் மற்றும் பாறைகள் விழுந்தமையினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சீரமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை, மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மஸ்கெலியா – … Read more

இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சீனத் தூதரகம் பீய்ஜிங்குடன் ஆலோசனை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் யுவான் வாங் 5 கண்காணிப்புக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சீனத் தூதரகம் பீய்ஜிங்குடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. சீன தூதுவர் நேற்று(06) இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இதனைத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் இந்த உளவு கப்பல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் கப்பல் விடயம், இலங்கை அரசாங்கத்திற்கு புவிசார் அரசியல் … Read more

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் தொடர்கின்றன  

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின், துறைமுக சேவைகள், கடல்சார் சேவைகள், எரிசக்தி மையம், துறைமுக கைத்தொழில் பூங்கா மற்றும் ஒருங்கிணைப்பு மூலோபாயம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நாட்டில் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ந்தும் செயற்படுவதாக அந்த துறைமுக நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும், கப்பல் போக்குவரத்து, வணிகச் செயல்பாடுகள் மற்றும் பிற சேவைகளும் எவ்வித தடைகளும் இன்றி 24 மணிநேரமும் செயல்படுவதற்குத் தேவையான எரிபொருள் வழங்கப்படுவதை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உறுதி செய்துள்ளது. அண்மையில் இங்கு வந்த MV … Read more

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னின்று செயற்படுவேன் – உடப்பு மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ உறுதிபடத் தெரிவிப்பு

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்பது மாத்திரமன்றி, அவற்றை நிறைவேற்றுவதற்கும் முன்னின்று செயற்படுவேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சிலாபம், உடப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று (06.08.2022) இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலின் போது, உடப்பு மீன்பிடிக் கிராமத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கடலரிப்பை தடுத்து, தமது எதிர்கால இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்கள், தமது தொழில் நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் முன்னெடுப்பதற்கு … Read more

சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயஅமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார். இதற்கமைவாக நெல்கொள்வனவுச் சபை விவசாயிகளிடமிருந்து ,ஒரு கிலோ நாடு நெல் 120விற்கும், சம்பா ஒரு கிலோ 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவை 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாளை ஆரம்பமாகும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள்

நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் … Read more

இலங்கைக்கு இந்தியா கடும் அழுத்தம் – சீன கப்பலுக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய முடிவு

சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், இது குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 எதிர்வரும் 11ம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது பிராந்தியத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த கப்பல் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு திறன்களைக் கொண்டிருப்பதால் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமிருந்து ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என பொதுச் செயலாளர் கடந்த (03) ஜனாதிபதி அவர்களுக்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை … Read more