சிறைச்சாலையில் கையடக்கதொலைபேசி: தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி, அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். 2022.07.27 கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி என்று குறிப்பிடப்படும் குறித்த சந்தேகநபர், … Read more