பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான 261,760 லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும், கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயற்கையான நீர்ப்பாசன குளங்கள் இல்லாததால் மழைநீரை மாத்திரம் பயன்படுத்தி விவசாயிகள் … Read more

வவுனியாவில்,பழங்கால முறைப்படி சிறுபோக நெல் அறுவடை

வவுனியா மாவட்டத்தில் இம்முறை 12,000 ஏக்கர்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரதேசங்களில் பழங்கால முறைப்படி சிறுபோக நெல் அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு சூழ்நிலையிலும் காலதாமதமின்றி இம்முறைப்படி அறுவடை மேற்கொள்வதால் பயிர்கள் சேதமாவதை தடுக்கக்கூடியதாக உள்ளதென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்: சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 09, 10 , 12ஆம் திகதிகளில்

ஜனாதிபதி இன்று (03) பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 09, 10 மற்றும் 12ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று நாட்கள் விவாதத்துக்கு வழங்குமாறு கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.] 2022 … Read more

ரணிலின் இரட்டை நிலைப்பாடு அம்பலம் – சர்வதேச ரீதியாக நெருக்கடி

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரான அவரின் செயற்பாடுகள் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுக்க ரணில் முயற்சிப்பதாக சர்வதேசம் மற்றும் உள்ளுர் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண் ஒருவரின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியாக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரணிலின் நிலைப்பாடு குடிவரவு விதிமுறைகளை மீறி காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிராக தனது சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டார் … Read more

மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும், அநுராதபுரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மடு ஆவணி திருவிழா தொடர்பான முன் ஆயத்த … Read more

அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு….

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சாரதிகள், தமது வாகனத்திற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லையெனில், நெடுஞ்சாலையில் பயணிப்பதை தவிர்க்குமாறு அதிவேக நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது. அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,போதிய அளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக்கூடாது’ என்ற டிஜிட்டல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

துரித பொருளாதார வளர்ச்சியை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துதல் எமது முயற்சியாகும்

பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துதல் அரசாங்கத்தின் முயற்சியாக உள்ளதோடு, 2026 ஆம் ஆண்டளவில் நிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். 2025-க்குள் முதன்மை வரவுசெலவு திட்டத்தில் உபரியாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 140 சதவீதமாக உள்ளது. 2032 ஆம் ஆண்டளவில் இதனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் … Read more

வருட இறுதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது

இந்த வருட இறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த வருடத்திற்கான புதிய வழங்குனர் ஒருவர்(supplier) தெரிவாகியுள்ளார்.எனவே அடுத்த 16 மாதங்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தி, மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.