தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் … Read more

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றி (காணொளி – முகநூல்) Source link

தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும்

பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (03) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிடடார்.. அம்மக்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் … Read more

ஜனாதிபதி தலைமையில் ,ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று (03)  முற்பகல் 10.30ற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன் போது ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இன்றைய தினம நிகழ்வில் வழமையாக மேற்கொள்ளப்படும் சிறப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் இடம்பெற மாட்டாது. அத்துடன் ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட மாட்டாது. தேசியக்கொடி மாத்திரமே பறக்க விடப்படவுள்ளது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ … Read more

கம்போடியாவில் நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

2022 ஆகஸ்ட் 4 முதல் 5 வரை நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் பிராந்திய மன்றத்தில் 10 ஆசியான் உறுப்பு நாடுகள், உரையாடல் கூட்டாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் அவுஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா, பங்களாதேஷ், கொரிய … Read more

ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி அமைச்சில்  சந்தித்தார். அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மிசுகோஷி ஆகியோர் இந்த ஆண்டு 70வது ஆண்டு நிறைவை எட்டிய பன்முக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர். ஜப்பானிய அரசாங்கம் சரியான நேரத்தில் வழங்கிய உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சவால்களைத் தணிப்பதற்காக அரசாங்கம் … Read more

ஜனாதிபதி தலைமையில் ,புதிய பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

புதிய பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று (03)  முற்பகல் 10.30ற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன் போது ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இன்றைய தினம நிகழ்வில் வழமையாக மேற்கொள்ளப்படும் சிறப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் இடம்பெற மாட்டாது. அத்துடன் ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட மாட்டாது. தேசியக்கொடி மாத்திரமே பறக்க விடப்படவுள்ளது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாகஇ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  … Read more